Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி பாகிஸ்தானின் உளவுத்துறை ஏஜெண்ட்; லாலு பிரசாத்

Advertiesment
மோடி பாகிஸ்தானின் உளவுத்துறை ஏஜெண்ட்; லாலு பிரசாத்
, செவ்வாய், 12 டிசம்பர் 2017 (16:39 IST)
2016ஆம் ஆண்டு பதான்கோட் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி உடந்தையாக இருந்ததாக லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

 
2016ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமான நிலையத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத் யாதவ், பதான்கோட் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உடந்தையாக இருந்தார் என குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
பாகிஸ்தானுக்கு அழையா விருந்தாளியாக செல்கிறார். பதான்கோட் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுக்கு அந்நாட்டு உளவுத்துறைக்கு உதவுகிறார். பாகிஸ்தான் பிரதமரை பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கிறார், அவருக்கு ஏராளமான பரிசுகள் கொடுக்கிறார். இருந்தாலும் பாகிஸ்தான் இன்னும் மோசமாகவே இருக்கிறது. பாகிஸ்தானை வெறுப்பதாக இருந்தால் அந்நாட்டின் நட்புநாடு அந்தஸ்தை வாபஸ் பெறதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகரை குறி வைக்கும் ஸ்டாலின் ; அறிவாலயம் செல்லும் கருணாநிதி