Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கால்நடைத் தீவன வழக்கு : லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிப்பு

கால்நடைத் தீவன வழக்கு : லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிப்பு
, சனி, 23 டிசம்பர் 2017 (15:39 IST)
கால்நடை தீவன வழக்கிலிருந்து பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனத தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் பீகார் முதல் அமைச்சராக  இருந்த போது (1991 முதல் 1994 வரை) கால்நடைத் தீவனம் வாங்கியதில், அரசு கருவூலத்தில் இருந்து 960 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

அதாவது, பீகாரில் உள்ள பல அரசு கரூவூலங்களிலிருந்து பணம் எடுக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அதில், தியோஹர் அரசு கருவூலத்தில் இருந்து ரூ.89 லட்சம் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்த வழக்கிலிருந்து லாலு பிரசாத் உட்பட 15 பேரும் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், தண்டனை விவரம் 2018ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி தெரிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்துகலாம் நினைவிடத்தில் குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்த் மரியாதை!