Webdunia - Bharat's app for daily news and videos

Install App

152 ரன் இலக்கு... தமிழக அணி பட்டத்தை தக்க வைக்குமா?

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (14:25 IST)
தமிழகத்திற்கு எதிராக களமிறங்கிய கர்நாடகா இறுதிப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை 151 ரன்களில் முடித்தது. 

 
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழக அணியும், கர்நாடகாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த போட்டி தற்போது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் ஷங்கர், பவுலிங் தேர்வு செய்துள்ளார். முதலில் களமிறங்கிய கர்நாடகா இறுதிப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை 151 ரன்களில் முடித்தது. மிடில் ஓவரில் மனோகரிடம் இருந்து நல்ல மீட்சி மற்றும் பிரவின் துபே மற்றும் சுசித் ஆகியோரிடமிருந்து இன்னும் சிறப்பான ஃபினிஷிங் இருந்தது. அதிகபட்சமாக அபினவ் மனோகர் 46, பிரவீன் 33 மற்றும் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய தமிழ்நாடு அணி அந்த பட்டத்தை தக்க வைக்கும் நோக்கில் இந்த போட்டியில் விளையாடி வருகிறது.  152 ரன்கள் எடுத்தால் இந்த சீசனில் சாம்பியன் பட்டம் தமிழகம் வசமே இருக்கும். 

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments