Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்து வீரர்களைப் பாராட்டிய டிராவிட்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (10:58 IST)
இந்திய அணி நியுசிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இந்திய அணி. இந்நிலையில் இப்போது இந்தியா வந்த நியுசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வொயிட் வாஷ் செய்து வெற்றி பெற்றுள்ளது. இது இளம் வீரர்களுக்கு புத்துணர்ச்சியும் உத்வேகமும் அளித்துள்ளது.

இந்நிலையில் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல் டிராவிட் தொடர் வெற்றிக் குறித்து பேசியுள்ளார். அதில் நியுசிலாந்து வீரர்களை பெரிதும் பாராட்டியுள்ளார். அவர் பேச்சில் ‘ உலகக்கோப்பை தொடர் முடிந்து 48 மணி நேரத்தில் பயணம் செய்து, இந்தியாவின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் ஆறே நாட்களில் மூன்று போட்டிகளில் விளையாடுவது சாதாரணம் அல்ல. எனவே இந்த வெற்றியை நாம் எதார்த்தமாக நின்றுதான் அணுகவேண்டும். அடுத்த 10 மாதங்களுக்கு நமக்கு பெரிய தொடர்கள் உள்ளன’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments