சாம் கர்ரன் தொடர்ந்து அணியில் இடம் பெறுவார்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவது போட்டியில் மும்பை அணியுடன் மோதியது. கடைசி நேரத்தில் அதிரடியாக சாம் கர்ரன் களமிறக்கப்பட்டார். அவர் களமிறக்கப்பட்டதை அடுத்து மும்பை வீரர்களே ஆச்சரியமடைந்தனர். தோனி தான் அடுத்ததாக களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென கடைக்குட்டி சிங்கம் சாம் கர்ரன் களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது
ஆனால் அவர் அதிரடியாக 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து இலக்கை மிக அருகில் கொண்டு வந்து சேர்த்தார். அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான பிராவோ காயம் காரணமாக சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் நிலையில் அவருடைய இடத்தை சாம் கர்ரன் சரியாக பூர்த்தி செய்துவிட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அவர்கள் தெரிவித்துள்ளார்
சாம் கர்ரன் மீது கேப்டன் தோனி அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் எனவேதான் அவரை சரியான நேரத்தில் களமிறக்கிவிட்டதாகவும், அவர் தொடர்ந்து ஆடும் 11 பேர் அணியில் இடம் பெறுவார் என்றும் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்து உள்ளார்
எனவே கடைக்குட்டி சிங்கம் என்று அழைக்கப்படும் சாம் கர்ரன் இந்த தொடர் முழுவதும் அணியில் இடம் பெற்றிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது