Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரியான நேரத்தில் சாம் கர்ரனை இறக்கிய தோனி: குவியும் பாராட்டுக்கள்

Advertiesment
சரியான நேரத்தில் சாம் கர்ரனை இறக்கிய தோனி: குவியும் பாராட்டுக்கள்
, ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (07:28 IST)
சரியான நேரத்தில் சாம் கர்ரனை இறக்கிய தோனி
நேற்று நடைபெற்ற முதலாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தோனி புத்திசாலிதனமாக சரியான நேரத்தில் சாம் கர்ரனை இறக்கியதால் தான் வெற்றி கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
நேற்றைய போட்டியில் சென்னை அணி 163 என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தபோது 17ஆவது ஓவரின் முடிவில் 18 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் 18வது ஓவரின் முதல் பந்திலே நட்சத்திர ஆட்டக்காரரான ஜடேஜா எதிர்பாராத விதத்தில் அவுட்டானார் 
 
இதனை அடுத்து தோனி அல்லது கேதார் ஜாதவ் களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சாம் கர்ரனை தோனி களமிறக்கினார் இருக்கிறார் . இது மும்பை அணியினர்களுக்கே ஆச்சரியத்தை அளித்தது
 
ஆனால் சாம் கர்ரன் அதிரடியாக களம் இறங்கிய உடனே 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டர அடித்து வெற்றிக்கு தேவை வெறும் 12 ரன்கள் என்ற நிலைமைக்கு கொண்டு வந்தார். இதனை அடுத்து சாம் கர்ரனை தோனி இறக்கியது மிகச் சரியான முடிவு என்று கிரிக்கெட் விமர்சகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றன
 
சாம் கர்ரன் 18 ரன்களில் அவுட் ஆனாலும் அதன் பின்னர் போட்டியை முடிக்க மிக எளிதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் வழக்கம்போல் தனது அனுபவ முடிவு இந்தப் போட்டியிலும் வெற்றியைக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IPL 2020 -மும்பை இந்தியன்ஸ் அணியை சிதறடித்து ’’சென்னை கிங்ஸ் சூப்பர் வெற்றி ’’!