முரளி விஜயின் கவனக்குறைவும் தோனியின் புத்திசாலித்தனமும்
நேற்று சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 163 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே வாட்சன் விக்கெட் விழுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது
இதனை அடுத்து இரண்டாவது ஓவரில் முரளிவிஜய்யும் எல்பிடபிள்யூ முறையில் அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் முரளி விஜய்க்கு எதிராக இருந்த டூபிளஸ்சிஸ் அது அவுட் இல்லை என்று முரளி விஜய்யிடம் கூற முயன்றார். ஆனால் முரளிவிஜய் அவரைக் கவனிக்கவேயில்லை. அம்பயர் அவுட் கொடுத்ததும் மைதானத்தை விட்டு வெளியேறினார்
அதன் பின்னர் ரீப்ளேயில் முரளிவிஜய் அவுட் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. முரளிவிஜய் கொஞ்சம் நிதானித்து சக வீரரிடம் ஆலோசனை செய்து ரிவ்யூ கேட்டு இருந்தால் கண்டிப்பாக அவர் ஆட்டத்தை தொடர்ந்து இருப்பார்
இந்த நிலையில் தல தோனிக்கும் இதே மாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டது. 18வது ஓவரில் தோனி தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் என்று அவுட் அம்பயரால் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் தல தோனி சக வீரரான டூபிளஸ்சிஸ்டம் ஆலோசனை செய்து ரிவ்யூ கேட்டார். இதனை அடுத்து ரீப்ளேவில் அவர் அவுட் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தோனி தனது ஆட்டத்தை தொடர்ந்தார்
இதே முறையை முரளிவிஜய்யும் கடைபிடித்து இருந்தால் அவரும் நேற்று தனது தொடர்ந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முரளிவிஜய் அவசர முடிவால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ஆனால் அதே நேரத்தில் தோனி தனது புத்திசாலித்தனத்தால் விக்கெட்டை கையில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது