Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்… எத்தனை வருடங்களுக்கு பின் தெரியுமா?

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (08:46 IST)
பெங்களூர் அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் நேற்று அரைசதம் அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் ஒரு கதாநாயகன் போல அறிமுகமானார். பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் அதிரடியாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால் அடுத்தடுத்த சீசன்களில் அவரின் அதிரடி காணாமல் போனது. அதுமட்டுமில்லாமல் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியாமல் அவர் தடுமாறினார். அதனால் அவரை பஞ்சாப் அணி கழட்டிவிடவே டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. அங்கும் அவரின் சொதப்பல் தொடர்ந்ததால் அவர்களும் கழட்டிவிட இந்த முறை பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில் அவர் முதல் போட்டியில் 30 ரன்கள் சேர்க்க நேற்றை ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி வரை நின்று 57 ரன்கள் சேர்த்தார். இது அந்த அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேக்ஸ்வெல்லின் இந்த அரைசதம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின் அடிக்கப்படும் அரைசதம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments