Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உணர்ச்சிவசப்பட்டு அழுத க்ருணாள்… கட்டித்தழுவி தேற்றிய தம்பி!

Advertiesment
உணர்ச்சிவசப்பட்டு அழுத க்ருணாள்… கட்டித்தழுவி தேற்றிய தம்பி!
, புதன், 24 மார்ச் 2021 (08:14 IST)
அறிமுகப்போட்டியிலேயே அதிவேக அரைசதம் அடித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் க்ருணாள் பாண்ட்யா.

நேற்றைய போட்டியில் ஆல்ரவுண்டர் க்ருணாள் பாண்டியா, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 6 ஆவது விக்கெட்டுக்கு இறங்கிய அவர் அதிரடியில் புகுந்து விளாசினார். இதன் மூலம் அவர் 31 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். அதில் 7 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடக்கம்.

இந்த போட்டியில் அவர் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அறிமுக வீர்ர ஒருவரின் அதிவேக அரைசதமாகும். அவரது இன்னிங்ஸ் முடிந்ததும் அவரை நேர்காணல் செய்ய தொகுப்பாளர் அழைத்தபோது எதுவும் பேச முடியாமல் அவர் உணர்ச்சிவசபட்டு அழத் தொடங்கினார். அப்போது அருகில் இருந்த அவரின் சகோதரர் ஹர்திக் பாண்ட்யா கட்டியணைத்து தேற்றினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

116 ரன்களுக்கு 10 விக்கெட்… சறுக்கிய இங்கிலாந்து… கலக்கிய இந்திய பவுலர்கள்!