Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கே.எல்.ராகுல் அதிரடி அரைசதம்: 11 ரன்ரேட்டில் செல்லும் பஞ்சாப்!

கே.எல்.ராகுல் அதிரடி அரைசதம்: 11 ரன்ரேட்டில் செல்லும் பஞ்சாப்!
, திங்கள், 12 ஏப்ரல் 2021 (21:14 IST)
இன்று நடைபெற்று வரும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிக்கும் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் கிறிஸ் கெயில் அதிரடியாகப் 28 பந்துகளில் 40 ரன் அடித்து அவுட் ஆனார். 
 
இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் தீபக் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடினர்.கே.எல்.ராகுல் சற்றுமுன் வரை 43 பந்துகளில் 79 ரன்களுடன் விளையாடி வருகிறார் 
 
தீபக் ஹூடா 6 சிக்சர்களுடன் 28 பந்துகளில் 64ரன்கள் அடித்து அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 201 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் அந்த அணியின் ரன் ரேட் 11க்கும் மேலாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதே ரீதியில் சென்றால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 225ஐ தொட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த அதிரடி முடிவு