Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீப் ரூமர்ஸ்... தோனி பற்றிய தவறான செய்தி: விளக்கம் அளித்த குல்தீப்!!

சீப் ரூமர்ஸ்... தோனி பற்றிய தவறான செய்தி: விளக்கம் அளித்த குல்தீப்!!
, புதன், 15 மே 2019 (16:06 IST)
இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தோனி பற்றி எந்த வித கருத்தும் கூறவில்லை என தெரிவித்துள்ளார். 
 
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக பரிணமித்து வருகிறார் குல்தீப் யாதவ். இந்நிலையில் குல்தீப் யாதவ் களத்தில் தோனி கொடுக்கும் ஆலோசனைகள் குறித்து மனம் திறந்து பேசினார். 
 
தோனி அதிகமாக வந்து நம்மிடம் பேசிக்கொண்டிருக்க மாட்டார். அவர் எதாவது டிப்ஸ் வழங்கவேண்டும் என நினைத்தால் அதை நம்மிடம் சொல்வார். ஆனால் பலமுறை தோனியின் முடிவுகள் தவறாகியுள்ளது. ஆனால் அதை நாம் அவரிடம் சொல்ல முடியாது என கூறியதாக நேற்று செய்திகள் வெளியானது. 
webdunia
இந்நிலையில் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த குல்தீப் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இங்கே எந்தவித காரணமில்லாமல் மலிவான வதந்திகளை உருவாக்க விரும்பும் நமது மீடியாக்ளின் மற்றொரு சர்ச்சையில் சிக்கி கொண்டிருக்கிறோம். 
 
சில பேரால் இந்த செய்தி பரவி வருகிறது இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. மதிப்பிற்குரிய தோனி குறித்து நான் எந்தவொரு விரும்பத்தக்காத செய்தியும் கொடுக்கவில்லை என் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

93 பந்தில் 128 ரன்கள்: ஐபிஎல் அனுபவத்தில் வெளுத்து வாங்கிய பெயர்ஸ்டோ