Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 15 April 2025
webdunia

கமலை இழிவுபடுத்திய அதிமுக நாளிதழ் – அருவருப்பான செய்தி வெளியீடு !

Advertiesment
கமல்ஹாசன்
, புதன், 15 மே 2019 (13:48 IST)
அதிமுகவின் நாளேடான நமது அம்மா கமலை இழிவுபடுத்தும் விதமாக மிகவும் கீழ்த்தரமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது

அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன்  ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி  கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று  கூறினார்.

கமலின் இந்த பேச்சு சர்ச்சையானதை அடுத்து பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கமலின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘ கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார்.

அதையடுத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் கமலைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பொலி காளைக்குப் புரியுமோ புனிதமிகு இந்து தர்மம் என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தியின் அருகில் கமல் தனது மகள் ஸ்ருதிஹாசனுக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் பிரசுரித்துள்ளனர். கமலைப் பொலிகாளை என்றும் செய்திக்கு துளியும் சம்மந்தம் இல்லாத புகைப்படத்தை வைத்தும் அருவருக்கத்தக்க வகையில் இந்த செய்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஜீவ சமாதி ’ அடைந்த பெண்ணைப் பற்றிய ஆச்சர்யம் : வைரலாகும் வீடியோ