20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

Mahendran
சனி, 6 டிசம்பர் 2025 (15:00 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ் வென்றுள்ளது. 
 
கடந்த 20 போட்டிகளாக டாஸில் வெற்றி பெறாமல் இருந்த இந்திய அணி, விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்குகிறது.
 
இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேபோல், தென்னாப்பிரிக்க அணியிலும் காயம் காரணமாக விலகிய ஸோர்ஸி மற்றும் பர்கருக்கு பதிலாக ரிக்கல்டன் மற்றும் பார்ட்மன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
ஏற்கெனவே டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், இந்த ஒருநாள் தொடரைச் சமன் செய்ய இந்திய அணி கட்டாயம் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 20 போட்டிகளுக்குப் பிறகு நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றிருப்பது இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments