Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை ஹாக்கி: விறுவிறுப்பான ஆட்டத்தை டிரா செய்த இந்தியா

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (20:45 IST)
ஒடிசாவில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாகவும் தடுப்பு ஆட்டமும் ஆடியதால் கோல்கள் போட இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர்

முதலில் பெல்ஜியம் அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னரை சரியாக பயன்படுத்தி ஒரு கோல் போட்டது. இதனையடுத்து இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் ஒரு கோலை அபாரமாக போட்டு கோல் கணக்கை சமன்படுத்தினார்

ஆனால் இரண்டாம் பாதியில் பெல்ஜியம் மீண்டும் ஒரு கோல் போட்டு முன்னணியில் இருக்க, ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் இந்தியா ஒரு கோல் போட்டு போட்டியை டிரா செய்தது. முதல் போட்டியில் வெற்றியும், இரண்டாம் போட்டியில் டிராவும் செய்துள்ளதால் இந்திய அணி 'சி' பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments