கஜா புயலில் தமிழக அரசின் நடவடிக்கைகள் வேகமக இல்லை என்று கூறிய கமல்ஹசனுக்கு மூளையில் கோளாறு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த மக்களை பார்வையிட சென்ற கமல்ஹாசன், இங்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. திரும்பும் இடமெல்லாம் விவசாயிகளின் அழுகுறல் கேட்கிறது. கோடிக்கணக்கான மரங்கள் அழிந்துள்ளன.
தமிழக அரசின் இந்த வேகம் பத்தாது. மக்களை மீட்டெடுக்க அரசு அசுர வேகத்தில் செயல்பட வேண்டும். அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மத்திய அரசு இந்த கஜா புயலை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. விவசாயிகளின் வலி அவர்களுக்கு புரியவில்லை. மத்திய அரசு இதனை பேரிடராக அறிவிக்க வேண்டும். நாட்டின் பிரதமர் இன்னும் மக்களை வந்து சந்திக்காதது வேதனையை அளிக்கிறது என கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக அரசு மக்களுக்கு உதவிட அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. மக்களுக்கு சேவையாற்றும் கூர்மையான அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. இந்த அரசை குறை கூறும் கமல்ஹாசனுக்கு மூளையில் கோளாறு ஏற்பட்டுள்ளது என காட்டமாக பேசினார்.