Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் அதே இடத்தில்தான் இருக்கிறோம் – ஐபிஎல் போட்டி குறித்து கங்குலி தகவல் !

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (11:07 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் இடங்களான தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. உலகளாவிய போட்டிகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளையும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடத்துவது இல்லை என பிசிசிஐ அறிவித்தது. அதன் பின்னர் நடத்துவது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் கவுன்சில் ஆலோசனை கூட்டம் நாளை நடத்த இருந்தனர். ஆனால் அந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டி நடக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி ‘ ஐ.பி.எல்.போட்டிகளை தள்ளிவைப்பதாக அறிவித்த அன்று எந்த இடத்தில் இருந்தோமோ அதே இடத்தில்தால் 10 நாட்களுக்குப் பிறகும் இருக்கிறோம். 3 அல்லது 4 மாதங்கள் கழித்து போட்டியை நடத்தும் திட்டம் உள்ளதா? என்று என்னிடம் கேட்டால் அதற்கான சாத்தியம் இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சர்வதேசத் தொடர்கள் பாதிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments