Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மஞ்சரேக்கருக்கு அறிவுரை வழங்கி இருக்கலாம் – முன்னாள் வீரர் ஆதரவு !

Advertiesment
மஞ்சரேக்கருக்கு அறிவுரை வழங்கி இருக்கலாம் – முன்னாள் வீரர் ஆதரவு !
, சனி, 21 மார்ச் 2020 (16:10 IST)
சஞ்சய் மஞ்சரேக்கருக்கு அறிவுரை மட்டும் வழங்கி அவரை பணியை விட்டு நீக்காமல் இருந்திருக்கலாம் என முன்னாள் வீரர் சந்திரசேகர் பண்டிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் பிசிசிஐ வர்ணனையாளர்கள் குழுவில் ஒருவராக இருந்து வந்தார். இந்நிலையில் அவரை திடீரென பிசிசிஐ அந்த குழுவில் இருந்து நீக்கியுள்ளது. இது சம்மந்தமாக சிஎஸ்கே அணி ட்விட்டரில் ‘இனிமேல் இந்த துண்டு துணுக்கோட வர்ணனையைக் கேட்க வேண்டிய தேவையிருக்காது’ எனத் தெரிவித்து ஒரு டிவிட்டை போட்டுள்ளது. இதை சி எஸ் கே ரசிகர்கள் பலரும் டிவிட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகளின் வர்ணனையின் போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியைத் தூக்கியும் மற்ற அணிகளை மட்டம் தட்டி பேசுவதாக மஞ்சரேக்கர் மேல் குற்றச்சாட்டு உண்டு. மேலும் அவர் சி எஸ் கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை துண்டு துக்கடா வீரர் என சொல்லி கேலி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது அதே பாணியில் சிஎஸ்கே அவரைக் கலாய்ததது.

இந்நிலையில் முன்னாள் வீரரான சந்திரசேகர் ‘ஒரு வர்ணனையாளராக மஞ்சரேக்கர் பேசும் சில வார்த்தைகள் யாருக்காவது பிடிக்காமல் போயிருக்கலாம். தனது வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் அவரால் பேச முடியாது. மஞ்ச்ரேக்கர் விஷயத்தில் பி.சி.சி.ஐ 'அட்வைஸ்' செய்தால் போதும், வர்ணனை பணியில் இருந்து நீக்கியிருக்க வேண்டாம். தனது முடிவை மறுபரீசலை செய்யவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IND vs SA ரத்து: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு பிசிசிஐ-க்கு நன்றி!