ஒலிம்பிக்கே போச்சு; ஐபிஎல் எம்மாத்திரம்? – தலையில் துண்டை போட்ட அணி உரிமையாளர்கள்!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (08:27 IST)
கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் ஐபிஎல் நடக்க வாய்ப்பே இல்லை என பேசிக்கொள்ளப்படுகிறது.

பிரபலமான ஐபிஎல் டி20 போட்டி வரும் 29ம் தேதி தொடங்கி நடைபெற இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 15க்கு பிறகு போட்டிகளை நடத்தி கொள்ளலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் நேற்று பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கினால் ஏப்ரல் 15ல் நடத்துவதும் சாத்தியமில்லாமல் போய்விட்டது.

இதுகுறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடக்கவிருந்த ஐபிஎல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஜூன் மாதம் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டிகளே அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் நடத்துவது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து ஐபிஎல் உரிமையாளர்கள் பேசும்போது ஒலிம்பிக் போட்டிகளை ஒப்பிடும்போது ஐபிஎல் ஒன்றுமே இல்லை. கொரோனா பரவி வரும் நிலையில் மக்கள் உயிர்தான் முக்கியம் என கூறுகிறார்களாம். இதனால் இந்த ஆண்டில் ஐபிஎல் நடத்துவதை ரத்து செய்து விட்டு அடுத்த ஆண்டு பார்த்து கொள்ளலாம் என்ற முடிவில் ஐபிஎல் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

ஜடேஜா ஒரு பழமைவாத வீரர்.. ரிஸ்க் எடுக்க தயங்குகிறார்: அஸ்வின் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments