Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக இருப்பார் – முக்கிய நிர்வாகி தெரிவித்த தகவல்!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (18:05 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தோனி 2022 ஆம் ஆண்டு வரை நீடிப்பார் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இனி விளையாடுவது உறுதியாக தெரியாத நிலையில் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஐபிஎல் தொடர். செப்டம்பர் மாதம் அமீரகத்தில் நடக்க இருக்கும் தொடரை மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். இந்நிலையில் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாகதான் இருக்கும் என சொல்லப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் ’இந்த ஆண்டு மட்டும் இல்லை. 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார். ஊடகங்கள் மூலம் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இந்தக் கருத்தை நான் தெரிவிக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார். இந்த செய்தியானது தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments