இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிக ரசிகர்களைக்
கொண்டவருமானதோனி,கிரிக்கெட்டின் 3 உலகக் கோப்பைகளையும்பெற்றுத் தந்தை ஒரே கேப்டன் ஆவார். இவர் தனதுபொறுமை மற்றும் நிதானத்துக்காகவே 'கூல்கேப்டன்' என அழைப்பட்டார்.
சமீபத்தில் நடந்த போட்டியில் அவர் பங்கேற்காத நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என எதிர்ப்பார்கப்பட்ட நிலையில்,கொரொனா வந்து அனைத்து தொழில்களையும் முடங்கிவிட்டது. ஐபிஎல் போட்டிகள் நடக்காததால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்ற செய்திகளும் ஊடகங்களில் கசிந்து வரும் நிலையில் தோனி மீண்டு விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்குவார் என அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.
இந்நிலையில்,சினிமா நடிகர், நடிகையர் பிறந்தநாளின்போது அவர்களது ரசிகர்கள் விதவிதமாக Common Display Picture வெளியிடுவது வழக்கம். அதேபோல் கிரிக்கெட்டில் தல என அழைக்கப்படும் தோனியின் பிறந்த நாளுக்கு விஷேசமான ஒரு CDP ஐ உருவாக்கி ரசிகர்கள் சமீபத்தில் இணையதளத்தில் டிரெண்ட் செய்து வந்தனர். #AdvanceHBDMahi #dhoni.
இந்நிலையில் , ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கவுள்ள ஐபிஎல்போட்டிகள், நவம்பர் 10 தேதி முடிவடைகிறது,
இப்போட்டிகல் துபாய், அபுதாபி,, ஷார்ஜாவில் 52 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயலர் விஸ்வநாதன் கூறியுள்ளதாவது:
வரும் 2020, 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
அதேபோல 2022 ஆம் ஆண்டிலும் தோனி விளையாட வேண்டும் அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகளில் படித்தேன். அவரைப் பற்றி நாங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை, அவர் பொறுப்புடன் அணியைப் பார்த்துக்கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்.