பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார்.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ. இவர், மான்செஸ்டர் யுனைட்டர் கிளப் அணியில் இருந்து விலகி, சமீபத்தில், சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல் நாசர் என்ற கிளப்பில் இணைந்தார்.
தற்போது நடந்து வரும் சவூதி ப்ரோ லீக் போட்டியில், நேற்று நடந்த போட்டியில் அல் நாசர் –அல்வெஹ்தா அணிகள் மோதின.
இதில், ரொனால்டோ 21 வது நிமிடத்தில் கோல் முதல் அடித்தார், அதன் பின்னர், 40 வது நிமிடத்தில் 2வது கோலும், 53 வது நிமிடத்தில் 3 வது கோல் என ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து 61 வது நிமிடத்தில் 4 வது கோல் அடித்த ரொனால்டோ தன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.
இந்த நிலையில், இப்போட்டியில் ரொனால்டோ அடித்த முதல் கோல் அவரது 500 வது கோல் ஆகும்.இதுவரை ரியல்மாட்ரிட் அணிக்காக 311 கோல்களும், மான்செஸ்டர் அணிக்காக 103 கோல்களும், ஜூவென்ஸ்ட் அணிக்காக 81 கோல்களும், அல் நாசர் அணிக்காக 5 கோல்களும் அடித்து மொத்தம் 503 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரொனால்டோ.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.