ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தூதரகம் மூடப்படும் என சவுதி அரேபியா அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு இதுவரை சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் எனவே தூதரகத்தை மூடுவதாகவும் சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே செக் குடியரசு நாடு ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டின் தூதரகத்தை மூடுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது சவுதி அரேபியாவும் அதே போன்ற ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபன் ஆட்சி வந்ததிலிருந்து பெண்களின் உரிமை பறிக்கப்படுவதாக உலகம் முழுவதும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது தூதரகங்களும் மூடப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.