2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

Mahendran
சனி, 6 டிசம்பர் 2025 (12:27 IST)
ஃபிஃபா நடத்தும் 2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் அடுத்த ஆண்டு ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெறுகிறது.
 
48 அணிகள் பங்கேற்கும் இதில் மொத்தம் 104 போட்டிகள் நடக்கவுள்ளன. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி, தனது கோப்பை பாதுகாப்பை அல்ஜீரியா அணிக்கு எதிராக தொடங்கும். இதுவே இத்தொடரின் முதல் போட்டியாகும்.
 
மொத்த அணிகளும் குரூப் ஏ முதல் குரூப் எல் வரை 12 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
 
குழுக்களின் பிரிவுகள்:
 
குரூப் ஏ: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிளே-ஆஃப் டி வெற்றியாளர்
 
குரூப் பி: கனடா, பிளே-ஆஃப் ஏ வெற்றியாளர், கத்தார், ஸ்விட்சர்லாந்து
 
குரூப் சி: பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து
 
குரூப் டி: அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, பிளே-ஆஃப் சி வெற்றியாளர்
 
குரூப் இ: ஜெர்மனி, குரோஷியா, ஐவரி கோஸ்ட், ஈக்வடார்
 
குரூப் எஃப்: நெதர்லாந்து, ஜப்பான், பிளே-ஆஃப் பி வெற்றியாளர், துனிசியா
 
குரூப் ஜி: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூசிலாந்து
 
குரூப் எச்: ஸ்பெயின், கேப் வெர்டே, சௌதி அரேபியா, உருகுவே
 
குரூப் ஐ: பிரான்ஸ், செனகல், பிளே-ஆஃப் 2 வெற்றியாளர், நார்வே
 
குரூப் ஜே: அர்ஜென்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்
 
குரூப் கே: போர்ச்சுகல், பிளே-ஆஃப் 1 வெற்றியாளர், உஸ்பெகிஸ்தான், கொலம்பியா
 
குரூப் எல்: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா
 
இந்த தொடரில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பங்கேற்க இருப்பது கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
27 மாதங்களாக நடந்த தகுதிச் சுற்றில் 42 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில், மீதமுள்ள 6 அணிகள் 'ஃபிளே-ஆப்ஸ்' மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments