Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகர நிர்மாணத்திற்கு வாஸ்துவை அடிப்படையாகக் கொள்ள முடியுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

நகர நிர்மாணத்திற்கு வாஸ்துவை அடிப்படையாகக் கொள்ள முடியுமா?
, வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (10:51 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

ராஜ ராஜ சோழன், ராஜேந்திரன் சோழன், மகேந்திர வர்ம பல்லவன் ஆகியோரது காலக்கட்டத்தில் பார்த்தால் அரண்மனை அமைப்பது முழுமையாக வாஸ்து பார்த்துத்தான் உருவாக்கியுள்ளனர்.

பல நகரங்களை அவர்கள் உருவாக்கினர். அவையும் வாஸ்துப்படிதான் அமைக்கப்பட்டிருக்கும். கிருஷ்ணதேவராயர் போன்ற பேரரசர்கள் எல்லாம் பல நகரங்களை ஆந்திராவில் உருவாக்கினர். அதுவும் வாஸ்துப்படிதான்.

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில்தான் வாஸ்துவின் வளர்ச்சி அதிகரித்தது. அவர்களது வழித்தோன்றல்களும் வாஸ்துவை முழுமையாக அங்கீகரித்தனர்.

நகரத்தை முக்கியமாக உருவாக்குவதற்கு முன்னர், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டன. அதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.

ராஜராஜ சோழன் நகரத்தை உருவாக்கியபோது கிழக்குப் பக்கம் என்ன வர வேண்டும், மேற்கு பார்த்தபடி என்ன இருக்க வேண்டும், தென் திசையில் என்ன அமைய வேண்டும் என்பதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.

நகரத்தை உருவாக்கும் போது தென் பகுதியிலேயோ மேற்கு பகுதியிலோ நதி, கடலோ இல்லாமல் இருக்கும்படி பார்த்து அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் மேற்கு, தென் பகுதியில் நதி அல்லது கடலோ, நீரால் சூழப்பட்டு இருந்தால் அவை நீரால் அழியும். நன்கு செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டாலும் அவை விரைந்து அழியும்.

கடலை ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளில் எல்லாம் சோழர் காலத்தில் குடியிருப்புகளைத் தவிர்த்தனர். கடல் வாழ்தலுக்கான பகுதி அல்ல என்று தடுத்தனர். பட்டினப்பாலை போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது போல, கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கப்பலில் இருந்து வரும் பொருட்களை அடுக்கி வைத்தல், மீன்பிடிப் படகு நிறுத்துமிடம் போன்றவற்றையே வைத்திருந்தனர்.

ஒருவேளை கடல் கொந்தளிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு அக்காலத்தில் மன்னர்கள் கடற்கரை பகுதிகளில் குடியிருப்புகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் கடற்கரையை ஒட்டி இருக்கும் மனை என்றால் அதற்கு தனி மரியாதை.

நகரத்தை அமைக்க வேண்டும் என்றாலும் அதற்கு முழுமையான வாஸ்து உண்டு. அவ்வாறு பார்க்காமல் ஒரு முதலமைச்சர் தனது மாநிலத்தில் ஒரு நகரத்தை உருவாக்கினால் அவர் அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடியாது. இதனை உறுதியாகச் சொல்ல முடியும்.

சென்னையில் இருந்து தென்பகுதியில் கேளம்பாக்கம் - மகாபலிபுரம் இடையே துணை நகரம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, இது வாஸ்து படி சரியாக அமையுமா?

சென்னை நகர வாஸ்துபடி அப்பகுதியில் துணை நகரம் அமைப்பது சரியல்ல. அதனைக் காட்டிலும் தாம்பரத்தை ஒட்டியுள்ள பகுதிகள் சிறப்பாக உள்ளது. கேளம்பாக்கம் - மகாபலிபுரம் பகுதி கடற்கரையை ஒட்டியப் பகுதிதானே. அதனால் சரியாக வராது.

செங்கல்பட்டு போன்ற இடங்கள் சாலச்சிறந்தது. அது ஆளுபவர்களுக்கும் சாதகமாக அமையும். நேர்மறை கதிர்களை மக்களிடையே உருவாக்கும். ஒரு வகையில் பார்க்கப்போனால் நகரின் வட பகுதிகளில் இதுபோன்று உருவாக்காமல் தென் பகுதியில் உருவாக்குவது நல்லது.

தென்கிழக்கில் அல்லாமல் தெற்கு, தென்மேற்கு திக்கில் அமைந்தால் நன்றாக அமையும். கேளம்பாக்கம்-மகாபலிபுரம் தென்கிழக்குப் பகுதி. அதில்லாமல் ஸ்ரீபெரும்பதூர், தாம்பரம், கிழக்குத் தாம்பரத்தில் ஒரு சில பகுதிகள் தெற்கில் வரும். அவை சாலச் சிறந்தது.



Share this Story:

Follow Webdunia tamil