ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன்!
ஜோதிடத்தின் வாயிலாக சமூக, அரசியல், பொருளாதார போக்குகளை துல்லியமாக முன் கணித்து வழி காட்டிட முடியும் என்பதனை ஆய்வின் மூலம் நிரூபித்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்.ஜோதிடத்தை பலத் தலைமுறைகளாக தொடர்ந்து பயிற்றுவித்து வந்த பாரம்பரியத்தில் வந்தவர் வித்யாதரன். இவருடைய பாட்டனார் செங்கல்வராய கனகசபை பஞ்சபட்சி சாஸ்திரத்தில் வல்லுனராக திகழ்ந்தவர். பறவைகளின் குரலை உணர்ந்து அர்த்தத்தை அறிந்து நிகழ்வுகளை துல்லியமாகக் கூறியவர். அவருடைய புதல்வர் பரமசிவம். மணி (ஜோதிடம்) மந்திர ஒளடதம்(மருத்துவம்) பயின்று மக்களுக்கு சேவை புரிந்தவர். பரமசிவம் ஆசிரியராகப் பணியாற்றி மத்திய - மாநில அரசின் சிறந்த தமிழாசிரியர் விருது பெற்றவர்.
பிரசன்ன ஜோதிடம், சாமுத்ரிகா லட்சணம் (நாசியை பிரதானமாக பார்த்து குணம், குறி கூறல்), எண் ஜோதிடம், குழந்தை வளர்ப்பு ஆகிய கலைகளையும் அறிந்த இவர், பிரியும் நிலையில் கணவன் - மனைவி வந்தால் அவர்களை நயமாகப் பேசி இணைந்து வாழச் செய்வதில் வல்லவர்.இந்த பாரம்பரியத்தில் வந்தவர் ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன், இளமையில் இருந்தே ஜோதிட ஆர்வம் கொண்டு தனது பாட்டனாருடனும் பின் தந்தையாருடனும் இணைந்து சாஸ்திரம் அறிந்தார்.தனி மனித தேவைக்கான ஒரு அம்சமாக நாடப்பட்ட ஜோதிடத்தை சமூக, அரசியல், பொருளாதார கணிப்பு காரணியாக மாற்றியவர் வித்யாதரன். இந்த கோணத்தில்௦ "தமிழர் வாழ்வில் ஜோதிடம்" என்ற தலைப்பில் இவர் செய்த ஆய்வை ஏற்று சென்னை பல்கலை முனைவர் பட்டம் அளித்தது. சமூக, அரசியல், நாட்டு நடப்பு ஆகியன எப்படி கிரகங்களின் போக்கால் பாதிக்கப்படுகிறது என்பதை தொடர்ந்து கூறி வந்துள்ளார். ஜோதிடம் என்பது விஞ்ஞானத்ைதப் போன்று மானுட வாழ்விற்கும், இயக்கத்திற்கும் வழிகாட்டுகிறது என்பதை விளக்கி வருகிறார்.ஜோதிடம் எனும் பூர்வீக ஞானத்தை, தற்போது அசுரத்தனமாக வளர்ந்து வரும் நவீனங்களுடன் தொடர்பு படுத்தி அன்றாட சிக்கல்களுக்கு தீர்வு தெரிவிப்பவர். மானுட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. எப்படி அந்த செயல்களின் கூட்டமைப்பு உள்ளது என்பதனை ஜோதிடப் பூர்வமாகப் பார்க்கிறார்.“ஒரு பிரச்சனை வருகிறது என்றால், அதற்கு காரணம் கோள்களின் கதிர் இயக்கம்தான். நல்லது நடக்கிறது என்றாலும் அதுவும் கோள்களின் கதிர் இயக்கம்தான். நாம் இப்போது எந்த கோளின் கதிர் இயக்கத்திற்குக் கீழ் இருக்கிறோம் என்பதனை அறிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நமது அணுகுமுறையை அமைத்துக் கொண்டால் எல்லா நேரங்களிலும் எல்லா செயல்களிலும் வெற்றிையப் பெற முடியும். ஒவ்வொரு நிமிடத்திலும் இயற்ைக மூலமாகவும், அன்றாட வாழ்வில் நாம் சந்திப்பவர் மூலமாகவும் அசிரீரியாக கோள்கள் நம்மை தாக்குகின்றன அல்லது வழி நடத்துகின்றன” என்று கூறும் வித்யாதரன், “காரியத்திற்கான காரணத்தை தேடுவது அறிவியல். ஒரு நிகழ்வு நடந்தால் அதனை காரண அறிவிற்கு உட்படுத்தி அர்த்தம் காண்கிறது அறிவியல். அதுபோலவே ஜோதிடமும் நமது பூர்வீக ஞானக் கூறுகளைக் கொண்டு இன்றைய வேகமான வாழ்வில் ஏற்படும் நெருக்கடியில் இருந்து நம்ைம மீட்டுக் கொள்வதற்கும், புதிய சிக்கல்களில் நாமேசென்று சிக்கிக் கொள்ளாமல் தவிர்பதற்கும் நம்மை வழிநடத்துகிறது” என்று கூறுகிறார்.இவரின் கணிப்புக்களும், ஆலோசனைகளும் பல இதழ்களிலும், தொலைக் காட்சிகளிலும் வெளிவந்துள்ளன. வந்துகொண்டும் இருக்கின்றன.இவரைத் தொடர்கொள்ள : ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்4
/ 37, மகாலட்சுமி தெரு,தியாகராயர் நகர்,சென்னை - 600 017.அலுவலக தொலைபேசி - 24348877மின்னஞ்சல் : [email protected]m