Religion Astrology Traditionalknowledge 0805 28 1080528022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கத்திரியில் குழந்தை பிறந்தால் கெட்டது என்பது?

Advertiesment
கத்திரியில் குழந்தை பிறந்தால் கெட்டது என்பது?
, புதன், 28 மே 2008 (12:55 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

கத்திரியில் என்ன செய்யக் கூடாது என்று சில நூல்கள் சொல்கின்றன. கத்திரியில் சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும். வெப்பம் இயல்பு நிலையைத் தாண்டி இருக்கும்.

விதையில் இருக்கும் உயிரணுக்கள் இந்த வெப்ப அலைகளால் பாதிக்கப்படும். அதனால்தான் கத்திரியில் நெல் விதை போன்றவைகளை காய வைக்கக் கூடாது என்பார்கள்.

விதை நெல்லை வைத்து நாற்று விடுவார்கள் அல்லவா அதையும் செய்யக் கூடாது. சித்திரையில் குறிப்பாக கத்திரியில் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதும் நல்லது.

சூரியனில் ஹீலியம் அணுக்கள் அதிகம் உள்ளன. இந்த ஹீலியம் அணுக்கள் இயல்பாகவே உயிர் முடிச்சு வரைப்போய் தாக்கக் கூடியவை.

இந்த காலத்தில் புற ஊதாக் கதிர்கள் வெளியீடு அதிகமாக இருக்கும். எனவேதான் அந்த காலத்தில் கத்திரியில் சுபக் காரியங்கள் எதையும் செய்ய மாட்டார்கள்.

அந்த மாதிரி நாட்களில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததும் அன்னப் படையல், திருவிழா போன்றவற்றை வைத்தனர்.

மரக்கன்று நடுதல் போன்றவையும் கூடாது. சித்திரையில் உடலுறவு கொண்டு உருவாகும் குழந்தைக்கு நிச்சயமாக ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்படும். அதேப்போலதான் சித்திரை மாதம் அல்லது அக்னி நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஒவ்வாமை அல்லது வருத்தம் தரக் கூடிய அல்லது மன வருத்தம் இருக்கும் சூழ்நிலை ஏற்படும்.

சித்திரையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சின்னதாகக் கூட ஒரு சில குறைபாடுகள் இருப்பதை பார்த்துள்ளோம்.

ஆனால் அதே சமயம் சித்திரையில் மற்ற காரியங்களைச் செய்யலாம். புதிதாக தொழில் துவங்குவது, தானங்கள் செய்வது, புதுமனை புகுதுல் போன்று எதையும் செய்யலாம். உயிரணுக்கள் தொடர்பான சிலவற்றை மட்டும்தான் செய்யக் கூடாது என்கிறார்களேத் தவிர ஒட்டுமொத்தமாக எதையுமே செய்யக் கூடாது என்று சொல்வதில்லை.

அக்னி நட்சத்திரம் என்பது என்ன?...

அக்னி நட்சத்திரம் என்பது என்ன?

அக்னி நட்சத்திரம் என்பது சூரியனின் வெப்பக் கதிர் கூடும் நேரம். அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கிறோம். அஸ்வினி, பரணி என 27 நட்சத்திரத்துடன் அக்னி நட்சத்திரம் என்றும் சேர்கிறது.

சூரியனின் உண்மையான பெயரை அப்போதுதான் நாம் கூறுகிறோம்.

சூரியன் என்பது விண் மீன்தான். மற்ற காலங்களில் நாம் அதனை சூரியன் என்கிறோம். இந்த நேரத்தில் மட்டும்தான் அதன் உண்மையான பெயரைச் சொல்லி அழைக்கிறோம்.

அறிவியல் விஞ்ஞான கூற்றுப்படி பூமிக்கு அருகில் சூரியன் வருகிற காலம்தான் அக்னி நட்சத்திரக் காலம் என்கிறார்கள்.


Share this Story:

Follow Webdunia tamil