Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸி. தொடரை இந்தியா கைப்பற்றுமா?

ஆஸி. தொடரை இந்தியா கைப்பற்றுமா?
, திங்கள், 29 செப்டம்பர் 2008 (18:44 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ட்ரேலிய அணி அக்டோபர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை மொத்தம் 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது.

இத்தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு எமது ஜோதிடர் ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் அளித்த பதில்:

அக்டோபர் 9-13ஆம் தேதி வரை பெங்களூருவில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தும்.

அக்டோபர் 17-21ஆம் தேதி வரை மொஹாலியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு கடினமாக இருக்கும். ஆனால் 20, 21ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு சாதகமான நிலை காணப்படுகிறது.

அக்டோபர் 29 முதல் நவம்பர் 2 வரை தலைநகர் டெல்லியில் நடக்கும் 3வது டெஸ்டில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்.

நவம்பர் 6-10ஆம் தேதி வரை நாக்பூரில் நடக்கும் இறுதி டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது.

எனவே முதல் டெஸ்டில் மோசமாக ஆடினாலும், 3வது, 4வது டெஸ்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக இந்தியா தொடரைக் கைப்பற்றும்.

Share this Story:

Follow Webdunia tamil