நடிகர் சிரஞ்சீவி புதிய அரசியல் கட்சி துவக்கியுள்ளார்? அவர் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் உண்டா?
, செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (12:20 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:சிரஞ்சீவி 26ஆம் தேதி கட்சி துவக்கியுள்ளார். அவர் எந்த கணக்கில் இதை செய்துள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் ஆட்சியைப் பிடிக்க துளியளவும் வாய்ப்பில்லை.நிறைய இழப்புகளை அவர் சந்திக்க வேண்டி இருக்கும். அவரால் அந்த மாநில அரசியலில் எந்த பெரும் மாற்றமும் ஏற்படாது.ஏனெனில் அவர் கட்சி துவக்கிய நாள் அப்படி. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. மிருக சீரிஷம் முடிந்து திருவாதிரை நட்சத்திரம் துவங்குகிறது.திருவாதிரை அவ்வளவு நன்றாக வராது. பிரச்சினைகளை அதிகமாகக் கொடுக்குமே தவிர ஆட்சி எல்லாம் பிடிக்க முடியாது. இழப்புகளை அதிகமாகக் கொடுக்கும். பெரிய இழப்புகளை அதிகமாக சந்திக்க வேண்டி இருக்கும். அதன் பிறகு கொஞ்சம் ஏற்றம் வரும். ஆனால் அதிகமாக இழக்க வேண்டியிருக்கும்.