நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி சேருமா?
Publish Date: Sat, 21 Jun 2008 (17:13 IST)
Updated Date: Sat, 21 Jun 2008 (17:12 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:பா.ஜ.க. அரசியல் தலைவர்களைப் பார்க்கும்போது, மேஷம், விருச்சிக ராசிகளில் இருக்கிறார்கள். அத்வானி மேஷம், வாஜ்பாய் விருச்சிகம். பா.ஜ.க. செவ்வாயின் ஆதிக்கத்தில் இருக்கிறது. பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்கள் பலரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளனர். ஜெயலலிதா சிம்ம ராசி. சிம்ம ராசிக்கு செவ்வாய் யோகக்காரன். அதனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. அப்படி தேர்தல் நேரத்தில் இணையாவிட்டாலும் தேர்தலுக்குப் பின்னராவது அ.தி.மு.க., பா.ஜ.க.வை ஆதரிப்பதற்கான சூழல் உருவாகும்.