Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்தெந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும்?

எந்தெந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும்?
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

தற்போது சனி கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறது. சனி சிம்மத்தின் வீட்டில் சூரியனின் ஆதிக்கத்தில் இருக்கிறது. சக்தியோடு இருப்பதால் அதனுடைய எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான துறை நன்கு இருக்கும். பொதுவாக சனியை நாம் எலக்ட்ரானிக்சுடன் தொடர்பு படுத்துவோம். எனவே தற்போது எலக்ட்ரானிக்ஸ் தொடர்பானவை புகழ்பெறும்.

அடுத்த சனியின் வீடான கன்னியிலும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளே அதிகம் விரும்பப்படும்.

அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு சனியின் ஆதிக்கத்தில் உள்ள படிப்பான எலக்ட்ரானிக்ஸ் அதிகம் பேர் படிக்கும் சூழல் உருவாகும்.

அடுத்தது சனியின் நிழல் கிரகமான ராகுவிற்குரியது சமையற் படிப்பு, ஏரோநாடிகல் என்ஜினியரிங், விமானம் தொடர்பான உயர்கல்வி படிப்பு உரியது. அந்த படிப்புகளும் நன்றாக போகும். இந்த படிப்புகள் மூன்றரை முதல் 4 ஆண்டுகளுக்கு சிறப்பாக இருக்கும்.

மூன்றரை ஆண்டுக்குள் கிரக அமைப்பு மாறிவிடும். அப்புறம் இந்த படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு கிட்டுமா?

வாய்ப்பு கிட்டாது. அதனால் என்ன செய்ய வேண்டும் என்றால், மூன்றரை அல்லது 4 ஆண்டுக்குப் பிறகு எப்படி கிரகஅமைப்பு மாறும் என்பதை கணித்து அதற்கேற்ப படிக்க வேண்டும்.

கர்நாடகாவில் புதிய ஆட்சி நீடிக்குமா?

நீடிக்கும். ஏனெனில் முதலில் நவமி அன்று பதவி ஏற்பதாக இருந்தது. அது தள்ளிப் போனது. இதுவே ஒரு நல்ல அறிகுறி. இது அவர்களாக செய்யவில்லை.

குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள மத்திய அரசு கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொண்டது. அது இவர்களுக்கு நல்லதாக அமைந்துவிட்டது.

அதனால் இவர் நல்ல நாளில் பதவி ஏற்றுக் கொள்ள வழி வகுத்துவிட்டது.

பங்குச் சந்தை தள்ளாடுவது ஏன்?

பங்குச் சந்தைக்கு சுக்கிரன், புதன், குரு ஆகிய கிரகங்களைச் சொல்லலாம். புதன் தற்போது வக்கிரமாக இருக்கிறது. வக்கிர நிவர்த்தி ஆகியுள்ளது. அது தனது சொந்த வீட்டிற்கு வரும்போது வக்கிரம் சீரடையும். அது எப்போது என்றால், 30.6.2008ல் புதன் சொந்த வீட்டிற்கு வருகிறது. அப்போது புதன் மேம்படும்.

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் பரபரப்பாக இருக்கும்.



Share this Story:

Follow Webdunia tamil