Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எண் ஜோதிடப்படி பெயரை மா‌ற்‌றி வை‌த்து‌‌க் கொ‌ள்வதா‌‌ல் மா‌ற்ற‌ம் ‌நிகழுமா?

ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்

Advertiesment
எண் ஜோதிடப்படி பெயரை மா‌ற்‌றி வை‌த்து‌‌க் கொ‌ள்வதா‌‌ல் மா‌ற்ற‌ம் ‌நிகழுமா?
, வியாழன், 31 ஜனவரி 2008 (17:26 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் :

இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். அதாவது அதிர்ஷ்டம், அதிர்ஷ்ட கல் அணிந்தால் நல்லது நடக்கும் என்பது எல்லாம் தவறு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தசா புக்தி நடக்கும் போது அதிர்ஷ்டமானதாக இருக்கும். அந்த காலத்தில் அவர்களுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும். எனவே அதிர்ஷ்ட கல் போட்டால் நடக்கும் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை.

மேலும் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளவதும் தேவையற்றது. மூக்கன், சுழியன்னு எல்லாம் பெயர் வைத்துக் கொள்பவர்கள் நல்ல வசதியாக வாழ்வதையும் பார்த்திருக்கிறோம்.

எனவே ஒருவருடைய ஜாதகத்தில் தசா புக்திகள் நன்றாக அமையும்போது அவருடைய வாழ்க்கையும் நன்றாக இருக்கும். அதற்கும் அவரது பெயருக்கோ, அதிர்ஷ்ட கல்லுக்கோ எந்த தொடர்பும் இல்லை.

பெயரை மாற்றினாலும், மாற்றவில்லை என்றாலும், கல்லு போட்டாலும், போடாவிட்டாலும் அவர்களுடைய கிரக அமைப்பின்படிதான் எல்லாமும் நடக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil