வாய்ப்பே இல்லை வாஸ்து படி பார்த்தால் இந்தியாவின் வாஸ்து அமைப்பில் காஷ்மீர் ஈசானியத்தில் உள்ளது. வாஸ்துபடி ஈசானியம் பள்ளமாக இருக்க வேண்டும். ஆனால் இது எதிர்மறையாக உள்ளது. இதுதான் பல நாடுகள் இந்தியாவில் இருந்து பிரிந்ததற்கு காரணம். மேலும் இதனால் வட இந்தியாவில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் மூழ்குவதற்கே வாய்ப்பு உள்ளது. நமது ஈசானியம் உயரமாக அமைந்துவிட்டதால் அப்பகுதியில் போர், உயிரிழப்பு ஏற்படும். இதற்கு தீர்வு காண வாய்ப்பில்லை.
வடக்கில் இமயமலை பெரிய பாதுகாப்பு அரண் என்று கூறப்படுகிறது. ஆனால் வாஸ்துபடி அது சரியில்லை என்பதா?
ஜோதிடத்தின் கண்ணோட்டத்தில் அது தவறாக உள்ளது. ஒவ்வொருவரின் கண்ணோட்டமும், பார்க்கும் விதமும் அவரவர் அடிப்படையில் மாறுபடும்.
சுதந்திரம் அடைந்த நாட்களைக் கணக்கில் கொண்டே நமது நாட்டின் ஜோதிட அமைப்பை கணக்கிடுவோம்.
15.8.1947 நள்ளிரவு அன்று அவர்கள் ஆட்சியை நம்மிடம் ஒப்படைத்ததார்கள். அதை வைத்துப் பார்த்தால் இந்தியா பூச நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னம் ஆகும்.
ரிஷப லக்னம் என்பதால்தான் இந்தியா எல்லா போராட்டங்களையும் தாங்கிக் கொண்டு இன்னமும் நிலையாக இருக்கிறது. உடையாமல் இருக்கிறது. அதற்கு ஸ்திரத் தன்மை உண்டு. கடக ராசி என்றாலே சர ராசி, வேகமான இயக்கங்களைக் கொண்ட ராசி சர ராசி, உடையற அளவிற்கு கொண்டு போகும். ஸ்திர லக்னமாக இருப்பதால் முடிவில் அது கட்டுப்படுத்தப்படும். சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும்.