Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நரே‌ந்‌திர மோடி வெ‌ற்‌றி உறு‌தி எ‌ன்ப‌தி‌ல் மா‌ற்ற‌ம் உ‌ள்ளதா?

நரே‌ந்‌திர மோடி வெ‌ற்‌றி உறு‌தி எ‌ன்ப‌தி‌ல் மா‌ற்ற‌ம் உ‌ள்ளதா?
, புதன், 12 டிசம்பர் 2007 (15:55 IST)
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் தற்பொழுது முதலமைச்சராக இருக்கும் பாஜகவின் நரேந்திர மோடிக்கு பலத்த போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் குறைந்த பெரும் பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்று கூறியிருந்தீர்கள். அதில் ஏதும் மாற்றம் உள்ளதா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே கணித்திருந்தபடிதான் நிலைமை உள்ளது.

எப்படிக் கூறுகிறீர்கள்...

சனிக்கிழமை வரை இவரது ஜென்ம நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தின் ஆதிக்கம் இருந்தது.

கடந்த 3ஆம் தேதியிலிருந்து 8 ஆம் தேதி வரை மோடிக்கு கடினமான நேரம். சர்ச்சைகள் அதிகரித்திருந்தது.

அதன்பிறகு நிலைமை மாறியுள்ளது. இன்று வாக்குப்பதிவில் கடைசி 2 மணி நேரத்தில் இவருக்கு அதிகமான வாக்குகள் விழுந்திருக்கும்.

இன்று தேர்தல் நடந்த 87தொகுதிகளில் 60 விழுக்காடு வாக்குப்பதிவு நடந்துள்ளது. இது மோடிக்கு சாதகமானதே. எனவே நாம் ஏற்கனவே கணித்து கூறியிருந்தபடி, குறைந்தபட்ச அருதிப் பெரும்பான்மையுடன் மோடி ஆட்சியைப் பிடிப்பது உறுதி.

வரும் ஞாயிற்றுக் கிழமை 2வது கட்டமாக 95 தொகுதிகளில் நடக்கும் தேர்தலிலும் மோடிக்குத்தான் அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அன்று சதய நட்சத்திரம். அது மோடியின் ஜென்ம நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்திற்கு நட்பு நட்சத்திரமாகும். எனவே அவருக்கு சாதகமானதே.

சதயம் கும்ப ராசிக்குரிய நட்சத்திரம். அது மோடியின் ஜென்ம நட்சத்திரத்திற்கு நான்காவது ராசி வீடு. இது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 9வது ராசி வீடு. இவைகள் மட்டுமின்றி ஜென்ம நட்சத்திரத்தை வைத்து கணக்கிடப்படும் தாரா பலனின் அடிப்படையில் பார்த்தாலும் மோடிக்கே சாதகமாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil