Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிர்ஷ்டக் கல் பற்றி விரிவாகக் கூறுங்கள்.

அதிர்ஷ்டக் கல் பற்றி விரிவாகக் கூறுங்கள்.
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

கற்கள் என்றால் அனைத்துமே அதிர்ஷ்டக் கறகள்தான். ஆனால் எந்தெந்த கற்கள் யார் யாருக்கு அதிர்ஷ்டமானவை என்பதுதான் விஷயமே.

ஜாதகத்தில் இயக்குவிக்கும் கிரகங்கள் எவை எவை என்பது தெரிய வேண்டும். எந்த கிரகங்கள் இயக்குகின்றன. எவைகள் இயங்குகின்றன என்பதை அறிய வேண்டும்.

ஒரு சிலருக்கு சரியான ஜாதகமே இருக்காது. பிறந்த நேரம் சரியாகத் தெரியாமல் இருந்தாலும் லக்னம், நட்சத்திரம், ராசி எல்லாம் கூட மாறுபடும்.

எனவே ரேகையைப் பார்த்து அதிர்ஷ்டக் கல்லை தேர்ந்தெடுக்கிறோம்.

ஒரு சிலருக்கு புதன் நல்ல நிலையில் இருக்கிறது என்றால் கையில் புதன் மேடு நன்றாக இருக்கிறதா என்று பார்த்து அதற்குரிய கல்லான மரகத பச்சையைத் (எமரால்டு) தேர்வு செய்கிறோம்.

மரகதப் பச்சைக் கல்லை வாங்க முடியாதவர்களுக்கு அதே குணத்தில் உள்ள மற்றொருக் கல்லை பரிந்துரைக்கிறோம்.

புதன் நன்றாக இருக்கும். ஆனால் சுக்கிரன் பலவீனமாக இருக்கும். சுக்கிரன்தான் அதிர்ஷ்டக் கற்களுக்குரியவன். சுக்கிரன் பலவீனமாக இருப்பவர்களுக்கு ஜாதிக் கற்கள் அதாவது உண்மையான அதிர்ஷ்டக் கல்லைப் போடாமல், அதே வகையில் இருக்கும் கற்களைப் போடச் சொல்கிறோம்.

சிலர் எல்லாம் பணம் இருக்கிறது என்பதற்காக அதிர்ஷ்டக் கற்களை இஷ்டம் போல் வாங்கிப் போட்டுக் கொள்வார்கள். அதனால்தான் திடீர் விபத்து, மரணம் போன்றவை ஏற்படுகிறது.

எனவே அதிர்ஷ்டக் கல்லை சரியாக பார்த்து தேர்வு செய்து போட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.

webdunia photoWD
ஒவ்வொரு ராசிக்கல்லிலும் பல கனிம, தாது உப்புக்கள் உள்ளன. அந்த கனிம, தாது உப்புக்களின் தன்மையை வைத்துத்தான் கல்லை தேர்வு செய்கிறோம்.

தற்போதெல்லாம் உண்மையான அதிர்ஷ்டக் கற்கள் கிடைப்பது அரிதாகிறது. ஆனால் உண்மையான அதிர்ஷ்டக் கற்களைப் போட்டால்தான் அதற்குரிய பலன் கிட்டும்.

ரூபி கல் இருக்கிறது. அதாவது மாணிக்கக் கல். அதில் என்ன தாதுக்கள் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதில் அலுமினிய ஆக்ஸைட் தான் அதிகமாக இருக்கிறது. ஏ எல் 2 ஓ 3. அதை அடிப்படையாக வைத்து நம்முடைய உடம்பில் என்னென்ன இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

நம்முடைய உடம்பில் இரும்புச் சத்து, கால்சியம் அளவு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

ஜோதிடப்படி இதையெல்லாம் எப்படி பார்ப்பீர்கள்?

அதாவது செவ்வாயும் சனியும் சேர்ந்திருந்தால் இரும்புச்சத்து குறைவாக இருக்கும். சிலருக்கு நாங்களே சொல்லி அனுப்புவோம். அவர்களும் மருத்துவரிடம் போய் ரத்த பரிசோதன¨ செய்துவிட்டு பிறகு போன் செய்வார்கள். ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று டானிக் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்.

சிலதெல்லாம் ஜோதிடத்திலேயே பார்த்துவிடலாம். ரத்தினங்களுக்கு மருத்துவக் குணங்கள் நிறைய இருக்கிறது. இந்த மருத்துவ குணங்களோடு நமது உடல் நிலை ஒத்து இருக்கிறதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டும்.

சும்மா ஒரு நகைக் கடைக்குப் போனோம் அங்கே பலகையில் எழுதப்பட்டிருந்தது.

webdunia
webdunia photoWD
மேஷத்திற்கு பவளம், ரிஷபத்திற்கு வைரம், மிதுனத்திற்கு மரகதம், கடகத்திற்கு முத்து, சிம்மத்திற்கு மாணிக்கம் இப்படியெல்லாம் போடவேக் கூடாது. இதெல்லாம் பொதுவானவை.

நாம் எந்த ராசியில் பிறந்தாலும் உள்ளுக்குள் நமது ஜாதக அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துத்தான் வாங்க வேண்டும்.

கற்கள் என்பவை ரசாயனங்களின் கூட்டினால் உருவாகுபவை. மனித உடல் என்று பார்த்தால் அதுவும் பல ரசாயனங்களின் கூட்டுத்தான்.

நமது உடலுக்குப் பொருந்தி வராத கற்களைப் போடும்போது உயிருக்கே ஆபத்து ஏற்படுவதெல்லாம் உண்டு.

டயானா இறக்கும் முன்பு முத்து மாலை அணிந்தார்கள். அதில் இருந்துதான் அவர்களுக்கு பிரச்சினை தொடங்கியது என்று அங்குள்ள பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டது. அவர்களுடைய ஜாதகத்திற்கு அது பொருந்தாமல் போய் இருக்கலாம்.

சூரிய ஆதிக்கத்தில் இருப்பவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்ட முத்து மாலையை அணியக் கூடாது. அப்படி அணிந்தால் அது தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

தவறான சிந்தனை, தவறான அணுகுமுறை, தவறான பாதையில் செல்லுதல், தவறான நண்பர்கள் போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

இப்போதெல்லாம் உண்மையான கற்கள் கிடைப்பது மிக மிக அரிதாகிவிட்டது. இங்கு நகைக் கடைகளில் வைத்திருப்பது எல்லாமே... கற்களைப் பட்டைத் தீட்டும்போது தெறித்து விழும் கண்ணாடித் துகள்களை எடுத்து வைத்துக் கொண்டு அதிர்ஷ்டக் கற்கள் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே அதிர்ஷ்டக் கற்களை வாங்கும்போது அதற்குள் நீரோட்டம் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

முன்பெல்லாம் அதிர்ஷ்டக் கற்களை வாங்கியதும் உடனே போட்டுக் கொள்ள சொல்ல மாட்டார்கள். முதலில் பாக்கெட்டில் வைத்துப் பாருங்கள். 10 நாட்களுக்கு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்பின்பு விரலில் போட்டுக் கொள்ளச் சொல்வார்கள். இது மிகவும் நல்ல வழி முறை.

ஆனால் இப்போதிருக்கும் அவசர யுகத்தில் அப்படி எல்லாம் யாரும் செய்வதில்லை.

ஜாதகத்தைப் பார்த்து பின்பு வாங்கி அணிந்து கொள்வதில் பிரச்சினை இல்லை. ஆனாலும் ஜாதகத்தில் தெளிவற்ற நிலை இருக்கும்போது மேற்கூறிய வழிமுறை சிறந்ததே.

ஒரு சில கடைகளில் மூன்று அதிர்ஷ்டக் கற்களை ஒரே மோதிரத்தில் வைத்துத் தருவார்கள். இதெல்லாம் மிக மிக தவறு.

ஒரு ரா‌சி‌யி‌ல் செ‌வ்வா‌ய் ந‌ன்றாக இரு‌ந்தா‌ல் நவர‌த்‌தின‌ம் அ‌ணியலா‌ம். ஆனா‌ல் மூ‌ன்று க‌ற்க‌ள் எ‌ல்லா‌ம் ‌எ‌ப்போது‌ம் பொரு‌ந்தாது.

மேஷ‌ம், ‌விரு‌ட்‌சிக‌ம் எ‌ல்லா‌ம் செ‌வ்வா‌யி‌ன் ரா‌சி. கடக‌ம், ‌சி‌ம்ம‌ம் செ‌வ்வாயை யோகா‌திப‌தியாக‌க் கொ‌ண்ட ரா‌சிக‌ள். இவ‌ர்க‌ள் எ‌ல்லா‌ம் நவர‌த்‌தின‌ம் அ‌ணியலா‌ம். ஆனா‌ல் செ‌வ்வா‌ய் ந‌ன்றாக இரு‌க்க வே‌ண்டு‌ம். பாவ ‌கிரக‌ங்க‌ளி‌ன் சே‌ர்‌க்கை, பா‌ர்வை எ‌ல்லா‌ம் இ‌ல்லாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம்.

ஆனா‌ல் ஒ‌ன்பது ர‌த்‌தின‌த்தையே வடிவமை‌க்க வே‌ண்டு‌ம். அ‌தை அ‌ப்படியே சதுரமாக போ‌ட்டு‌க் கொ‌ள்ள‌க் கூடாது. அறுகோண‌ம், மு‌க்கோண‌ம் போ‌ன்ற வடிவ‌ங்க‌ளி‌ல் வடிவமை‌க்க வே‌ண்டு‌ம். அவ‌ர்க‌ளி‌ன் ஜாதக அமை‌ப்பை‌ப் பா‌ர்‌த்து அதனை வடிவமை‌க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அ‌ந்த க‌ற்க‌ள் த‌ங்களது க‌தி‌ர்களை ச‌ரியான ‌வி‌கித‌த்‌தி‌ல் உடலு‌க்கு அனு‌ப்பு‌ம்.

அ‌ந்த க‌‌ல்‌லி‌‌ன் எடை, த‌ங்க‌ம் அ‌ல்லது வெ‌ள்‌ளி‌யி‌ன் எடை போ‌ன்றவ‌ற்றையு‌ம், வடிவ‌த்தையு‌ம், ‌அடி‌ப்பாக‌ம் ‌திற‌ந்த ‌நிலை‌‌யி‌ல் போடுவது போ‌ன்று பலவ‌ற்றையு‌ம் ‌ச‌ரியாக‌ச் சொ‌ல்ல வே‌ண்டு‌ம்.

இதை‌ப் ப‌ற்‌றியெ‌ல்லா‌ம் யாரும் கவலைப்படுவதில்லை. வசதிக்கேற்றவாறு போட்டுக் கொள்கிறார்கள். அது தவற

எல்லாவற்றையும் பார்த்து போட வேண்டும். வாங்கி அணியும் கல் உண்மையானதா என்பதையும் பார்க்க வேண்டும்.

மேலும், அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்ட உடனே எல்லாமே நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அது ஒரு சதவீதம்தான். நல்ல பலன்களை ஓரளவிற்குத்தான் கொடுக்கும். அதற்குத் தகுந்த மாதிரி நாம் பலவற்றை செய்ய வேண்டும்.

அப்போதுதான் நல்ல பலன்களைக் காண முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil