Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எண்ணெய்க்கு என்று கிரக அமைப்புகள் உண்டா?

எண்ணெய்க்கு என்று கிரக அமைப்புகள் உண்டா?
, வியாழன், 3 ஜூலை 2008 (14:02 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

எண்ணெயில் பல வகை உண்டு. அதாவது சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெயை ஒரு வகையாகப் பிரிக்கலாம். அவைகள் குரு கிரகத்திற்கு கீழ் வரும். கடலை எண்ணெய்க்கு உரியவர் குரு. இதுபோல் கச்சா (பெட்ரோலிய) எண்ணெய்க்கு உரியவர் ராகு.

தற்போது ராகுவும், சனியும் தான் உச்சத்தில் இருக்கிறார்கள். மற்ற கிரகங்கள் வலுவிழந்து காணப்படுகின்றன.

சனி தற்போது சிம்மத்தில் உட்கார்ந்திருப்பதால்தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பணவீக்கம் என்று எடுத்துக் கொண்டால் நம் நாடு மட்டும்தான் பெரிதாகப் பாதிக்கப்படுகிறது. 11 புள்ளி, 12 புள்ளி என்கிறார்கள். மற்ற நாடுகள் அதற்கேற்ற வகையில் நிலைமையை சமாளித்துக் கொள்கிறார்கள். ஆனால் ஆசிய நாடுகள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. சிம்மத்தில் சனி இருக்கும் வரை ஆசிய நாடுகளுக்கு இதுபோன்ற பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும்.

குறிப்பாக மகம் நட்சத்திரத்தில் இருக்கும் வரை இந்த நிலைதான் இருக்கும். மகம் நட்சத்திரத்தில் செப்டம்பர் 5 வரை இருக்கிறது. அதன் பிறகு பூர நட்சத்திரத்திற்கு வருகிறது. அதன்பிறகு பேசி சரி செய்யும் நிலை வரும்.

ஆனால் 27.9.2009 அன்று தான் சனி கன்னிக்கு வருகிறது. அப்போது தான் இந்த நிலைமை பெரும் அளவிற்கு மாறும். மாற்று எரிபொருள் சந்தையில் எளிதாகக் கிடைக்கும் நிலை கூட ஏற்படும்.

எண்ணெய் விலை உயர்விற்கு உண்மையான காரணம் அதனை வாங்கி விற்பவர்க‌ளி‌ன் நடவடிக்கைதான் எனப்படுகிறது. எனவே இதுபோன்றவர்கள் விலையை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக இருப்பதற்கான ஏற்ற சூழல்தான் நிலவுகிறதா?

ஆமாம். என்னவென்றால் குரு தான் இதுபோன்ற செயல்களுக்கு காரண கர்த்தா. வாங்கி விற்பதற்கு குரு காரணம். ஆனால் வாங்கி அதனை பதுக்கி வைப்பதற்கு சனி காரணமாக இருப்பார்.

பத்திர பரிவர்த்தனைகள் போன்றவற்றிற்கு குருதான் காரணமாக இருப்பார். குரு சொந்த வீட்டிற்கு வந்ததில் இருந்துதான் ஆன்லைன் வர்த்தகங்கள் அதிகரித்தன. குரு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொந்த வீட்டிற்கு வந்தார்.

கணக்கிட்டு பார்த்தால் கடந்த நவம்பரில் இருந்துதான் இதுபோன்ற பிரச்சினைகள் துவங்கின. வரும் டிசம்பர் மாதம் குரு நீச்சமாகிறான். அதன் பிறகு இந்த பிரச்சினைகள் கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

நடுவில் குரு வக்கிரமடைந்தது. குரு தான் தங்கத்திற்கு ஊரியவர், அப்போதுதான் தங்கக் காசு மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அதுபோல் குரு நீச்சமடையும் போது நிதி நிறுவனங்கள் பலவும் மூடப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil