Religion Astrology Articles 0806 26 1080626018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா?

Advertiesment
காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா?
, வியாழன், 10 ஜூலை 2008 (15:23 IST)
காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா? அல்லது ஒரு காலகட்டத்தில் இந்த உணர்ச்சி ஆட்டுவித்தல் என்பது மேலோங்கி நிற்குமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

இதுபற்றி ஏற்கனவே நாம் போகஸ்தானம் குறித்துப் பேசியுள்ளோம். பொதுவாக இலக்கியங்களிலெல்லம் குறிப்பிடுவது மாதிரி கண்ணோடு கண் நோக்கினாள் என்று கண்ணைத்தான் முக்கிய காரணமாகச் சொல்வார்கள். சூரியன், சந்திரன் பார்வைக்குரிய கிரகங்கள். ஆனால், காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கிரகம் சுக்ரன்தான். இதுதான் பாலியல் இந்த உணர்வுகளுக்கெல்லாம். அடுத்து, புணர்ச்சி, உணர்ச்சி, வேகம், செயல்பாடு இதற்கெல்லாம் உரிய கிரகம் செவ்வாய். எவ்வளவு நேரம், எப்படிப்பட்டது என்பதெல்லாம் நிர்ணயிப்பது செவ்வாய். இப்படி பல கிரகங்கள் அதில் அடங்கிக் கிடக்கிறது.

வாலிபத்தில் இருக்கும் காமம் கூட முறையாக செய்கிறது. ஆனால் வாலிபத்தை தாண்டி தனக்கு பிறந்த பெண்ணோ, பிள்ளையோ மணமுடிக்ககூடிய அளவிற்கு இருக்கும் போது கூட காம உணர்ச்சி அதிகரிப்பது ஏன்?

இதெல்லாம் பார்த்தீர்களானால் யவனம், இளமை, உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது, நரம்புகளைத் தூண்டக்கூடியது புதன். சிலருக்கு காலம் கடந்து கல்யாணம் நடக்கும், சிலருக்கு சீக்கிரம் நடக்கும். அது முக்கியம் கிடையாது. சிலருக்கு 55இல் இருந்து 75 வரை சுக்கிர திசை நடக்கும். அந்த நேரத்தில பார்த்தீர்களானால் காம உணர்ச்சி அதிகமா இருக்கும். முன்பே கூறியபடி, கண் பார்வை சூரியன், சந்திரன். அது பார்க்கும் போதே தூண்டுகிறது. ஆனால், சுக்கிரன்தான் காமத்திற்கு பிரதான கிரகம். அதனாலதான் சுக்கிரனில் இருந்து நீட்சமானாலோ, தவறான கிரகங்களில் சேர்ந்திருந்தாலோ முறையற்ற புணர்வுகளெல்லாம் நிகழும்.

“மகாலஷ்மி மாதிரி மனைவி இருந்தும், குரங்கு மாதிரி வைப்பாட்டி வச்சிக்கிறத” இதெல்லாம் வந்து சுக்கிரனோட ராகு, கேது, சனி இதெல்லாம் சேரும் போது, குறிப்பா சுக்கிரனோடு சனி இருந்தால் மாற்றநிலை புணர்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான கிரக சீர்த்திகள் உண்டு. இரண்டு கிரகங்கள் சேரும் போது மட்டுமே இந்த மாதிரி இருக்கமாட்டார்கள். ஏதேனும் ஒரு கிரகத்தின் திசை வரும்போது இந்த மாதிரியான புணர்ச்சி மாறுபாடுகள், தவறுகள் உண்டாகிறது.

“ரொம்ப நல்ல மனுஷங்க என் புருஷன், நிமிர்ந்துகூட பார்க்க மாட்டாருங்க. இப்ப இந்த மாதிரி ஆயிட்டாருங்” என்பதெல்லாம் அந்த கிரகத்தோடு திசை அதுவரை வரவில்லை என்று அர்த்தம். அது வந்த உடனே அப்படியே மாறுவார்கள்.

காலம் கடந்த ஞானம்னு சொல்லுவார்கள். ஆனால், காலம் கடந்த காமம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது இல்லையா?

ப‌தி‌‌ல்...

எனக்கு தெரிந்த ஒருவர், திருமணம் ஆனவர். தொழிலில் கடுமையான போட்டி காரணமாக கடுமையாக உழைக்க வேண்டிய நிலை. இரவு 11.30 மணிக்கு வந்து படுப்பது, காலையில் எழுந்து சென்றுவிடுவது என்று இருந்தது. அப்பொழுது காமமே இல்லாமல் இருந்துவிட்டார். ஆனால், இப்ப ஒரு கடைக்கு நான்கு கடைகள் கட்டி முடித்துவிட்டார். அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அவரும் திருமணம் செய்துகொண்டார். ஏனென்றால், இப்ப அவருக்கு சுக்கிர திசை. இப்ப அவருக்கு வயசு 69. ஆனால் அவரைப் பார்த்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள். முதலில் ஒல்லியா இருந்தாரு. இப்ப சுக்கிர திசைன்றதால, உடம்பெல்லாம் பூசின மாதிரி, மலர்ந்த முகம் அந்த மாதிரி இருக்கிறார்.

அப்ப இளமை திரும்புகிறது என்பதெல்லாம் உண்மைதானா?

இதெல்லாம் நாங்கள் அனுபவப்பூர்வமா பார்த்தது. இப்ப அந்த திருமணமானவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இளமைக் காலத்தில பிறந்த அந்த இரண்டு குழந்தைகளை விட இந்தக் குழந்தை தகதகன்னு இருக்கிறது.

போன வாரத்தில் ஒருவர் வந்தார். முன்பெல்லாம் புணர்ச்சியின் போது என்னோட மனைவியால ஈடுகொடுக்கவே முடியாது. ஆனால் இப்போது என் மனைவிக்கு என்னால ஈடுகொடுக்க முடியவில்லை என்று சொன்னார். மூன்று வருடமா இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றும் சொன்னார்.

அவருக்கு பார்த்தீங்கன்னா, சனியும், புதனும் ஒன்றாக சேர்ந்து போகஸ்தானத்துல உட்கார்ந்த நிலையில் சனி திசை வந்துவிட்டது. சனியும், புதனும் 3ஆம் இடத்தில் சேர்ந்திருந்தா நக்குவது போன்றே இருக்கும். உயிர் குறி எழும்புவது, அதனோட வேகங்கள் இதெல்லாம் இருக்கும். ஏனென்றால் இந்த இரண்டுமே அலி கிரகங்கள். அலி கிரகங்கள் இரண்டும் சேர்ந்து போகஸ்தானத்தில் போய் சேரக்கூடாது.

அந்த டாக்டரைப் பார்த்தேன், வயாக்ரா வாங்கினேன் அப்படி இப்படின்னு சொன்னார். தயவு செய்து எங்கேயும் போய் அலையாதீங்க. இதுக்கான சில உணவு வகைகளெல்லாம் இருக்கிறது. இப்ப சனிக்கு கம்பு, கேழ்வரகு, மக்காச் சோளம் அந்த மாதிரி உணவுகளை உட்கொள்ளுங்கள். பிறகு சனிக்கு திறந்தவெளியில அதிக நேரம் இருந்தால் நல்லது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொட்டை மாடியில வாக்கிங் போங்க. திறந்தவெளியில் காற்று வாங்குங்க, அவித்த உணவுகளைவிட இயற்கை உணவுகளை எடுத்துக்குங்க அப்படீன்னு சொல்லி அனுப்பினேன்.

சனி இயல்பான கிரகம். இயற்கையான கிரகம். அதனால் இயற்கை உணவுகள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். அப்புறம் வந்தாரு. நல்ல மாற்றம் இருக்குங்க என்று சொன்னார்.

இதேபோல பெண்களுக்கும் ஏற்படும் இல்லையா?

ஆமாம், அவருக்கு சில பரிகாரங்களையும் சொல்வோம். பாதரசம், சில வேர்களுடைய சாறு, சில மூலிகைகளுடைய சாறுகளை கட்ட முடியும். அதாவது கட்டுகட்டுவது என்று சொல்வார்கள். அதை அணிந்துகொண்டு புணரும்போது, அதாவது முதுகுத் தண்டுவடம் முடியும் இடத்தில் அந்த மணியை நிறுத்திவிட்டு புணரும்போது புணர்ச்சி வேகம் அதிகரிக்கும். அதுமாதிரி சில பரிகாரங்கள் உண்டு.

கிரகங்களின் போக்கை உணர்ந்து, இப்போது என்ன தசா புத்தி நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். சில நேரங்களில் சனி திசையில் ராகு புக்தி, சனி திசையில் கேது புக்தி நடக்கும் போது டாக்டர்களிடம் போனா கூட அட்மிட் ஆகணும் சொன்னா கூட, செகன்ட் ஒபீனியன் கேளுங்க. தேர்ட் ஒபனீயன் கேளுங்க.

உங்கள் மகனை என்னவோ சொல்றீங்க. திடீரென்று மூட் அவுட்ல உங்க சட்டையைப் பிடிச்சிடுறான். ஐயோ, நான் வளர்த்ததே மார்ல பாயுதேன்னு அதிர்ச்சியாகி மூலையில முடங்காதீங்க. அந்த நேரம் பையன் கையால அவர் அடிவாங்குகிற நேரமாக இருக்கும். அதுல அதிர்ந்து நெஞ்சை பிடிச்சு உட்கார்ந்து, நான்காவது நாள் மாரடைப்பில் இறந்த தந்தையெல்லாம் உண்டு.

வளர்ந்த பையனையே நம்பி இருப்பாங்க. அவன் திடீரென்று இப்படி நடந்துவிட்ட பிறகு, அவ்வளவுதான்னு அதிர்ச்சியாயிடுவாங்க. இந்த மாதிரி பல நிகழ்வுகளெல்லாம் இதுல உண்டு. அதுல நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு புணர்ச்சி இல்லாமல் போவதும் உண்டு.

முறை தவறிய காமம் மற்ற பிற வாழ்க்கைக்கு வடிகாலாக இருக்கிறதா?

கே‌ள்‌வி‌க்கான ப‌திலை அடு‌த்த க‌ட்டுரை‌யி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil