Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வள்ளுவமும் ஜோதிடமும்!

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

Advertiesment
வள்ளுவமும் ஜோதிடமும்!
, செவ்வாய், 25 மார்ச் 2008 (16:18 IST)
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் என்று சொல்கிறது திருக்குறள். இக்குறள் ஜோதிடத்திற்கு முரண்பட்டல்லவா நிற்கிறது.

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

முரண்படவில்லை. நம்முடைய கர்மம் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது என்று வள்ளுவர் சொல்கிறார். அதாவது நல்லது கெட்டது போன்றவை. அதையேதான் ஜோதிடத்திலும், நல் வினை, தீ வினை என்கிறோம்.

நல்ல தசை, நல்ல புக்தி நடக்கும்போது நல்ல சிந்தனை, நல்ல உடல் நலம், நல்ல புத்தி, மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் தோன்றுகிறது. கெட்ட திசை, கெட்ட புக்தி நடக்கும்போது கெட்ட எண்ணம் தோன்றுகிறது. மற்றவர்களை கெடுக்கும் எண்ணம் உண்டாகிறது. பல நோய்கள் உண்டாகிறது. ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது, கோபம் போன்றவை உண்டாகிறது. குற்றமாக பேசாமல் இருந்தாலும் குற்றம் கண்டுபிடிக்க வைக்கிறது. இவை எல்லாமே தசா புக்திகள்தான்.

தசா என்பது தசை, புக்தி என்பது மனது, எனவே நல்ல தசா புக்தி நடக்கும்போது உடலில் ஒரு மெருகு ஏறுகிறது. மனம் சீராகிறது. சிந்தனை சிறப்பாக இருக்கும், வார்த்தை இனிக்கிறது. அனுசரித்துப் போக வைக்கும்.

ஆனால் மோசமான தசா புக்தியில் சரியாகப் பேசினாலும் தவறாக புரிய வைப்பது, சவால் விடுவது போன்றவை நிகழ்கிறது.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தமது
கிரகங்களே காரணம” என்று நாங்கள் கூறுகிறோம்.

கிரகங்கள்தான் எண்ணத்தைத் தூண்டுகிறது. அதுதான் செயலாக மாறுகிறது. சாதாரணமாக ஜோதிட நூல்களை எடுத்துக் கொண்டால் அதில், இந்த தசையில் இந்த புக்தி நடக்கும்போது அவர்கள் இந்த மாதிரி இருப்பார்கள், இந்த பிரச்சினை நடக்கும், இந்த புகழை அடைவார்கள், இந்த நோய் தாக்கும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளதே. எனவே கிரகங்களின் கதிர்களுக்கு நமது செயல்களை மாற்றி அமைக்கும் சக்தி உள்ளது.

webdunia photoWD
தெய்வத்தால் ஆகா தெனினும் தம்
மெய்வருத்தக் கூலி தரும்

என்ற குறளைப் பற்றி

எல்லோரும் தான் உழைக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர்தானே முன்னணியில் இருக்கிறார்கள். தற்போது முன்னணியில் உள்ள பல கவிஞர்களை விட நன்றாக கவிதை எழுதுபவர்கள் இன்னும் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் பிரபலமடையவில்லை.

பெரிய பெரிய நிறுவனங்களில் எல்லாம் கடுமையாக உழைப்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் சமீபத்தில் சேர்ந்து பெரிய பொறுப்பு, வசதிகளை அனுபவிப்பவன் வேறு ஒருவனாக இருப்பான்.

எனவே உழைத்தால் மட்டும் முன்னிலைக்கு வந்து விட முடியாது. அவர்களது தசா புக்தி சிறப்பாக இருந்தால் மட்டுமே சிறக்க முடியும். இலக்கை அடைய முடியும்.

நாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு எப்போது நல்ல தசா புக்தி வருமோ அப்போதுதான் நமக்கு வெற்றி கிட்டும். இதுதான் உண்மை.

உடனே உழைக்காமல் இருந்தால் வெற்றி கிட்டுமா என்று கேட்கக் கூடாது. ஏனென்றால் வேலை கிடைப்பது என்பது தசா புக்தியாக இருக்கலாம். ஆனால் அது கிடைக்க வேண்டுமானால் விண்ணப்பம் போட்டிருக்க வேண்டும். அதையும் செய்யாமல் வேலை கிடைக்கும் என்பது தவறு.




Share this Story:

Follow Webdunia tamil