Religion Astrology Articles 0802 27 1080227039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோ பூஜை, கஜ பூஜை எதற்காக செய்யப்படுகிறது?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

Advertiesment
கோ பூஜை
, புதன், 27 பிப்ரவரி 2008 (17:24 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

பூர்வ காலங்களில் பார்க்கப் போனால் துறவிகள் விரும்பி செய்யும் பூஜை கோ பூஜை. சங்கர மடம், அரவிந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்சர், விவேகானந்தர் என அனைத்து துறவிகளும் செய்தது கோ பூஜை.

webdunia photoWD
பசுவிற்குள் தேவர்களும், மூவர்களும் இருப்பதாக ஐதீகம். தேவலோகப் பசுவின் படத்தை எடுத்துப் பார்த்தால் அதில் வாலிற்குப் பின் லட்சுமி இருப்பது போல் இருக்கும். அதனால்தான் இன்றும் பசுவின் வால் பகுதியை தொட்டுக் கும்பிடும் வழக்கம் நம்மிடம் உள்ளது.

பசு மாட்டின் குளம்பு முதல் கொம்பு வரை தேவர்களும், மூவர்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அறிவியல் பூர்வமாகப் பார்க்கப் போனால், பசுவின் கோமியம் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. சாணமும் அவ்வாறுதான். பாலும் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடிய அளவிற்கு உள்ளது.

மற்ற மிருகங்களின் பால் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும்படியாக இல்லை. கழுதையின் பால் வேண்டுமானால் மருத்துவத்திற்காக ஒரு பாலாடை அளவிற்கு மட்டுமே கொடுக்கும் படியாக உள்ளது. எனவே தினசரி குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவிற்கு பசும் பால் உள்ளது.

மேலும், சைவமாக இருப்பதாலும், சாதுவாக இருப்பாலும், நமக்குப் பயன்பாடாக இருப்பதாலும் அதனை நாம் உடன் வைத்திருக்கிறோம்.

பிரம்மஹத்தி தோஷம்!

எவ்வளவு பெரிய பிரம்மஹத்தி தோஷம் இருந்தாலும் பசுவைத் தானமாகக் கொடுத்துவிட்டால் அந்த தோஷம் எல்லாம் விலகும் என்று அதர்வன வேதங்கள் சொல்லி இருக்கிறது.

ராஜ ராஜ சோழன், சில பிராமணர்கள் உளவாளிகாளாக இருந்த காரணத்தால் அவர்களை தண்டித்தான். அதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதற்கு பரிகாரமாக பொன்னால் பசு செய்து அதற்குள் நுழைந்து வெளியே வந்து அந்த பொன் பசுவை தானமாகக் கொடுத்ததால் அவனது பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அதன்பிறகுதான் அவன் பெரிய கொடிய நோயில் இருந்து விடுபட்டதாக கூறும் சான்றுகள் உள்ளன.

ராஜ ராஜ சோழன், எல்லாக் கலைகளிலும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டார். அதுபோலத்தான் பரிகாரப் பூஜைகள் எல்லாம் பார்க்கப் போனால் தேவர்கள், மூவர்கள் பின்பற்றிய பூஜைகள் எல்லாம் ராஜ ராஜ சோழன் மூலமாகத்தான் உயிர்த்தெழுந்தது.

அப்போது கோ பூஜை என்பது மிக முக்கியத்துவம் பெற்று இருந்தது. தங்க பசுவின் வாய்ப் பகுதி வழியாக நுழைந்து வால் பகுதி வழியாக வெளியே வந்து அதனை தானமாகக் கொடுக்கும் பரிகாரத்தை ராஜ ராஜ சோழன் பல கோயில்களில் செய்துள்ளான்.

குறிப்பாக நண்டானூர் என்ற இடத்தில் இருக்கும் கற்கடேஸ்வரர் கோயிலில் (நண்டு சிவனை வழிபட்ட இடம்) இந்த பரிகாரத்தை ராஜ ராஜ சோழன் நிறைவேற்றியுள்ளான். அதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில இருந்து நீங்கியுள்ளான்.

ஆனால் சாதாரண மக்கள் இதுபோன்று பொன்னால் பசுவை செய்ய இயலாது என்பதற்காகத்தான் அகத்தீக் கீரையை பசுவிற்கு கொடுக்கிறார்கள். அகத்திக் கீரையைக் கொடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடும். எல்லா விதமான தோஷங்களும் கோ பூஜை செய்வதன் மூலமாக நீங்கி விடுகிறது.

கோ பூஜை என்பது, பொய் சொல்வதால் ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யும். உடலால் செய்யும் கொடுமையால் ஏற்படும் தோஷம், காம இச்சையைக் கட்டுப்படுத்தும் சக்தி அல்லது காமத்தால் அத்துமீறி செய்த பாவங்கள் போன்றவற்றை இந்த கோ பூஜை நீக்கும். அதனால்தான் கோ பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

அதனால்தான் அரசன் இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தால் லாயத்தில் குதிரை கட்டி இருப்பது போன்று, துறவிகள் இருக்கும் மடத்திற்குள் நுழைந்தால் பசு இருக்கும் காட்சியும் காணப்படும்.

webdunia
webdunia photoWD
பொய் சொல்லாமல் இருக்க முடியாது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பொய் சொல்லலாம். அரசு ரகசியங்கள் போன்றவற்றை மறைப்பதற்காக பொய்களை சொல்கின்றனர். அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களை நீக்கும். குறிப்பாக உடலில் ஏற்படும் நோய்களை கோ பூஜை நீக்கும். மிகவும் குறிப்பிட்டு சொல்வதென்றால் மன உளைச்சல், ஒவ்வொமையால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை நீக்கும்.

மாடு தொழுவத்தை பெருக்கி, சாணம், கோமியம் குழைந்து இருப்பதை தோலில் பூசினாலே பல தோல் நோய்கள் தீர்கின்றன.

ரமணரை ஒருவர் பார்க்க வந்திருந்தார். அவருக்கு தோல் வியாதி. எங்கெங்கோ சென்றும் குணமாகவில்லை. அவர் பெரிய தொழில் அதிபர். அவர் பல்வேறு பாவ செயல்களையும், பலரை காயப்படுத்தியும் உள்ளார். அதனால்தான் இந்த தோல்வியாதி என்று கூறி அவரை மாட்டுத் தொழுவத்தில் ஒரு மண்டலம் பணியாற்றச் சொன்னார். மாட்டிற்கு புல் போடுவதில் இருந்து சாணத்தை சுத்தம் செய்வது வரை எல்லாமே செய்யச் சொன்னார். ஒரு மாட்டை மட்டும் கையிலேயே பிடித்துக் கொண்டு மேய்த்து வா என்று சொன்னார். அந்த 48 நாட்களுக்குள் அவரது தோல் வியாதி சரியாகிவிட்டது.


ஒரு தேயிலைத் தோட்ட முதலாளிக்கு தொழு நோய் வரத் துவங்கியது. அவர் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தது, பிறன் மனை கவர்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு பரிகாரமாக, 5 பசுக்களை வாங்கி வீட்டில் பராமரித்து, அதில் இருந்து கறக்கும் பாலை ஏழை எளியவர்களுக்கு வழங்கு. மேலும் ஒரு காராம் பசு வாங்கி சிவன் கோயிலுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பசுக்களை பராமரித்து, பசுவை தானமாகக் கொடுத்த பின்னர் தொழு நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அழுகத் துவங்கிய விரல்கள் வளரத் துவங்கின. அதுபோன்ற ஆற்றல் பசுவிற்கு உண்டு.

webdunia
webdunia photoWD
காராம் பசு என்றால் அதன் காம்புகள் மிகச் சிறியதாக இருக்கும். மற்ற பசுக்களிடம் இருந்து இவை வேறுபடும். எல்லா புல்லையும் உண்ணாமல் தேர்ந்தெடுத்து சில புற்களை மட்டுமே உண்ணும். அதன் பால் அதிக சுவையுடையதாக இருக்கும். அதிக சக்தி கொண்டதாகவும் இருக்கும். அந்தப் பாலுக்கும் பல மருத்துவக் குணங்கள் உண்டு. பழைய சிவாலயங்களில் எல்லாம் பார்த்தால், ஓரிடத்தில் சிவலிங்கம் புதைந்து கிடந்தது. அந்த இடத்தில் காராம்பசு பால் சொரிந்தது. அதைப் பார்த்த மேய்ப்பவன் ஊரில் போய் சொல்ல அங்கு தோண்டிப் பார்த்தால் சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது போன்ற இதிகாசங்கள் இருக்கும்.

தேவ ரகசியங்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றலும் காராம்பசுவிற்கு உண்டு. தெய்வீக சக்தியை அறியும் ஆற்றல் படைத்ததால்தான் பசுவை கோமாதா என்றும் அழைக்கிறோம்.

எனவே எவ்வகையில் பார்த்தாலும் தெய்வீகத் தன்மை வாய்ந்த பசுவிற்கு பூஜை செய்வது மிகவும் சிறந்த காரியம்.

அடுத்ததாக கஜ பூஜை!

இது மிகவும் வலிமையானது. பரிபாலன அதாவது அரசுக் கட்டிலில் அமருவதற்காக செய்யும் பூஜை. முதன்மை நாற்காலியில் உட்காருவதற்கான பூஜை. கஜகேசரி யோகம் என்று ஜாதகத்தில் ஒரு யோகம் சொல்லப்படுகிறது.

அதாவது ஜாதகத்தில் சந்திரனுக்கு நாலு, ஏழு, பத்தில் குரு உட்கார்ந்திருந்தால் கஜகேசரி யோகமாகும். இதுபோன்று அமைந்திருப்பவர்களுக்கு குரு தசையோ அல்லது சந்திர தசையோ நடந்தால் அப்போது அவர்கள் ராஜ யோகத்தை அடைவார்கள். நாட்டை ஆள்வார்கள். மற்ற கிரகங்களும் நன்றாக அமைந்தால் அரசையே ஆள்வார்கள்.

கஜகேசரி என்பது வெண்குற்றக் குடை தாங்கிய யானையின் மீது அமர்ந்து ராஜா வீதி உலா வருவார் அல்லவா அந்த யோகத்தை கஜ பூஜையின் மூலம் பெறலாம்.

அரசாட்சி புரிதல், அரசாலுதல், அரசு தொடர்பான வழக்கில் இருந்து விடுபடுதல் இதற்கெல்லாம் கஜ பூஜை துணையாக இருக்கும்.

ஒரு மடத்தில் துறவியாக இருந்தவர் கோ பூஜையைக் குறைத்து கஜ பூஜையை அதிகப்படுத்தினார். அப்போது பல மாநில முதலமைச்சர்கள் அந்த மடத்திற்கு வருவது அதிகரித்தது. எந்த முடிவு எடுப்பது என்றாலும் அந்த மடாதிபதியின் ஆலோசனையின்படிதான் நடந்தது. நீதிபதிகள், முதலமைச்சர்கள் என பலரது கார் அந்த மடத்தில்தான் இருந்தது.

ஆனால் இன்னார் இன்னார் இந்த இந்த பூஜ¨யை இந்த அளவிற்குத்தான் செய்ய வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. ஆனால் ஒரு மடாதிபதியாக இருந்து கொண்டு கஜ பூஜையை அதிகளவில் செய்ததால் அதற்கான பின் விளைவுகளையும் அவர் சந்திக்க வேண்டி வந்தது.

துறவி ஒருவர் அரசனாக முடியாது. அவ்வாறு இருக்க கஜ பூஜையை அதிகளவில் செய்யும் போது அரசனால் ஆபத்தும் ஏற்படும். அரசுப் பழிக்குள்ளாதல், அரசுக்கு எதிராகுதல் போன்றவை ஏற்படும். தற்போது அவர் கொலை வழக்கில் சிக்குண்டு நீதிமன்றம், ஜெயில் என அலைந்து கொண்டிருக்கிறார்.

எனவே அவர் கஜ பூஜை செய்ததற்கு ஈடாக கோ பூஜையும் செய்திருந்தால் இந்த அளவிற்கு பழிக்கு ஆளாகியிருக்க மாட்டார்.

கோ பூஜை என்பது எல்லாவற்றிற்கும் நல்லது. அதனை செய்வதால் சிறந்த பலன்களை அடையலாம். தற்காப்புக்கும் கோ பூஜை சிறந்தது. கோவை அதாவது பசுவை தானமாக கொடுப்பதும் நல்லது.

ஆனால் கஜ பூஜையை மட்டும் பார்த்துத்தான் செய்ய வேண்டும். கஜ பூஜையை செய்துவிட்டு சும்மா அங்கேயே இருந்து விடக் கூடாது. கஜம் என்றால் ஆற்றல். ஆற்றலை வைத்துக் கொண்டு ஒரே இடத்தில் இருக்கக் கூடாது. கஜ பூஜை செய்துவிட்டு எல்லையைத் தாண்டி போய்விட்டு வர வேண்டும். கஜ பூஜை ஒரு ஆற்றலைத் தரும். அந்த ஆற்றலை வைத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தால் வீட்டில் இருப்பவர்களை அடிக்க வைக்கும். அதுபோன்ற எதிர்மறை செயல்கள் ஏற்படும்.

மக்கள் கோ பூஜையை விரும்பி செய்தால் நல்லது.


Share this Story:

Follow Webdunia tamil