Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2008-09 நிதி நிலை அறிக்கை எப்படி இருக்கும்?

Advertiesment
2008-09 நிதி நிலை அறிக்கை எப்படி இருக்கும்?
, வியாழன், 31 ஜனவரி 2008 (17:22 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் :

இந்த மாதம் பூராடம் நட்சத்திரத்தில் குரு போக ஆரம்பித்திருக்கிறார். குரு நிதிக்கான கிரகம். இந்தியாவின் ஜாதகத்தில் 6வது வீட்டில் குரு மறைந்து இருக்கிறார்.

குரு ஆட்சி பெற்று உட்கார்ந்திருக்கிறார். குரு ஆட்சி பெற்றால் மக்கள் மீது அதிகப்படியான வரிகள் திணிக்கப்படும். ஆனால் அவர் எந்த நட்சத்திரத்தில் போய்க்கொண்டிருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.

இப்போது அவர் ஆரம்பித்திருப்பது பூராடம். அது சுக்ரனின் நட்சத்திரம். குருவின் எதிர்மறை குணங்கள் கொண்ட கிரகம் சுக்ரன். சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் குரு பயணத்தைத் துவக்கி இருப்பதால் மக்களுக்குப் பயன்படும் வகையில் இந்த பட்ஜெட் அமையும். மக்கள் மீது வரிகள் திணிக்கப்பட மாட்டாது. வருமான வரி வரம்பு அதிகரிக்கப்படும்.

சாதாரண மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த பட்ஜெட் அமையும். அதே சமயம் பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், தொழில் முனைவர்கள் அதிகளவில் பயனடையும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும்.

குரு 6வது வீட்டில் மறைந்து இருப்பதால் மக்கள் மீது அதிக சுமையை சுமத்தாமல், அரசுக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும்.

எப்போதும் இல்லாத அளவிற்கு பற்றாக்குறை அதிகமாக இருக்கும்.

குருவும், செவ்வாயும் நேருக்கு நேர் சந்திக்கும் இந்த நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் காவல்துறை நவீனமயமாகும். ராணுவத்திற்கு அதிகமான நிதி ஒதுக்கப்படும். செயற்கைக்கோள், ஏவுகணை துறைகளுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil