விவசாயிகள் தற்கொலை எதனால்?
, திங்கள், 7 ஜனவரி 2008 (17:15 IST)
நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். விதர்பா, சட்டிஷ்கர், குஜராத போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குக் காரணம்?ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் இந்தியா விவசாய நாடு என்று சொல்லப்படுகிறது. அதன் முதுகெலும்பு விவசாயம் என்று கூறப்படுகிறது, அந்த நிலை இப்போது மாறி விட்டது. பூமிக்காரகன் செவ்வாய், அந்த செவ்வாய் பலவீனமாகி விட்டது. அதனால் பூமி தனது இயல்பு நிலையை அடைந்துவிட்டது. ஓராண்டாகவே செவ்வாய் புதன் வீட்டில் உள்ளது. மே ஜுன் மாதத்திலும் பலவீனமாகவ உள்ளது. அதனால்தான் விவசாயம் பாதிக்கிறது.விவசாயத்திற்கான கூலி சனி என்று கூறலாம். விவசாய கூலிகள் எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருப்பார்கள் கொஞ்சம் உணவு கொடுத்தால் போதும், மீதி நேரம் முழுவதும் உழைப்பார்கள். அந்த சனி தற்போது கடகத்தில் உட்கார்ந்திருக்கிறது. செப்டம்பர் 2009 வரை அங்குதான் இருக்கும். பின்னர் சிம்மத்திற்கு வரும். சிம்மத்தில் இருக்கும் வரை விவசாயத்திற்கு பாதிப்புதான்.செவ்வாய் எப்போது பலம் பெறும்?கிட்டத்தட்ட அக்டோபர் மாதத்தில்தான் பலமடையும். அவரது சொந்த வீடான செவ்வாய்க்கு வரும். விளை நிலங்கள் சீராகும். பிளாட் போட்டு விற்கக் கூடாது என்ற சட்டம் உருவாகும்.இதில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால்....
பொதுவாக நிலம் என்றால் பூமிகாரன் செவ்வாய், விளை நிலம் என்றால் அது சனியுடையது. சனி பகை வீட்டில் அமர்ந்திருபபதாலும், பகை கிரகத்துடன் சேர்ந்திருப்பதாலும் விவசாயிகள் பாதிப்பு, வேளாண் பயிர் இழப்பு, கடனை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.உணவு பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் வறுமையில் வாடுகின்றனர்.ஆனால் பிளாடபோட்டு விற்பவர்களை பாதிக்கவில்லை, அவர்கள் சிறப்பாகத்தான் இருக்கிறார்கள்.ஏனெனில் புதன் வணிகத்திற்கானவர். எனவே பூமியை விற்பவர்கள் வளர்ச்சி அடைவதற்கு புதன் தான் காரணம். உலகம் முழுவதுக்கும் இது பொருந்தும். இதுதான் காரணம்.