Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிள்ளைகள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால் பெற்றோர் என்ன செய்யலாம்?

Advertiesment
பிள்ளைகள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால் பெற்றோர் என்ன செய்யலாம்?
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன் :

பொதுவாக தங்கள் மகன்/மகள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால், பெற்றோர் உடனடியாக அவர்களை பிரிக்க நினைப்பதும், அவர்களுடைய மனதைப் புரிந்து கொள்ளாமல் திட்டுவது‌ம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், ஒரு சில காதலர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

ஆனால் அந்தச் சம்பவத்திற்கு பின்னர் பெற்றோர் பாசத்தால் வருந்துவதும், இப்படிச் செய்து கொள்வார்கள் எனத் தெரிந்திருந்தால் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்திருப்போமே என உறவினர்களிடம் புலம்புவதும் நடைமுறையில் இருப்பதுதான்.

இதுபோன்ற சோகமான அல்லது சில அவமானகரமான நிகழ்வுகளை தவிர்க்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

இன்று வந்த முதல் ஜாதகமே காதல் சர்ச்சை பற்றியது தான். ஒரே மகள். அப்பா, அம்மா வார்த்தைகளை இதுவரை மீறியது கிடையாது. நல்ல படிப்பு, ஒழுக்கம், வேலை, தேவைக்கு மேலான சம்பளம், அழகு என அனைத்தும் அந்தப் பெண்ணுக்கு உள்ளது.

ஆனால் அப்பெண்ணின் மாங்கல்ய ஸ்தானத்தை (7, 8வது வீடுகள்) பார்த்தால் கொஞ்சம் ஸ்திரத்தன்மையில்லாமல் உள்ளது. சுக்கிரன், ராகுவுடன் இணைந்து 6ல் மறைந்துள்ளார். அதற்கடுத்து 7க்கு உரிய கிரகமான புதனும் சரியில்லாமல் இருக்கிறது. 8ல் சனி அமர்ந்துள்ளது.

இதைக் கணித்த பின்னர், இப்பெண்ணுக்கு நீங்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தால் அவளது வாழ்க்கை சிறப்பாக இருக்காது. பெண் ஜாதகப் படி காந்தர்வ திருமணம் அதாவது காதல் திருமணம் தான் நடக்கும். மேலும் உங்கள் தகுதியை விட பொருளாதாரத்திலும், பிற விஷயத்திலும் குறைவான இடத்தில் இருந்து தான் வரன் அமையும் என பெற்றோரிடம் தெரிவித்தேன்.

மேலும் ஏதேனும் ஒரு வகையில் உங்கள் மகளை விட படிப்பிலோ, அந்தஸ்திலோ, சம்பளத்திலோ குறைவான ஒருவர் தான் கணவராக வருவார் என அப்பெண்ணின் ஜாதகத்தில் இருப்பதையும் பெற்றோரிடம் எடுத்துரைத்தேன். நீங்களே பார்த்து திருமணம் செய்து வைத்தால், 2வது திருமணம் நடைபெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே, அப்பெண் காதலிப்பவரையே திருமணம் செய்து வைத்தால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறினேன். இதையடுத்து பெண்ணின் காதலர் பிறந்த தினத்தை வைத்து பொருத்தம் சரியாக இருக்குமா எனக் கேட்டார்கள்.

இருவரது பிறந்த தினத்தை வைத்துப் பார்த்ததில் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருந்ததால், தயவு செய்து உ‌ங்க‌ள் பெண்‌ணி‌ன் காதல் விஷயத்தில் எந்தப் பிரச்சனையும் செய்யாமல், காதலன் வீட்டில் பேசி திருமணத்தை நல்ல முறையில் முடித்து வைக்கப் பாருங்கள் என்றேன்.

பெற்றோருக்கு உ‌ங்களது அறிவுரை எ‌ன்ன?

முதலில் தங்கள் மகன்/மகள் காதலிக்கிறார்கள் எனத் தெரிந்தால், அவர்களின் ஜாதகத்தை ஆராய வேண்டும். அவர்களுக்கு காதல் திருமணமா அல்லது பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்ய வேண்டுமா என்பதை கணிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு சிலருக்கு பெரியவர்களால் நிச்சயிக்க வேண்டிய திருமணமே சிறப்பாக இருக்கும். ஆனால் அந்த பெண்/ஆண் தசா புக்தி சரியில்லாத காலத்தில் காதல் வயப்பட நேரிடலாம். அந்த மாதிரி தருணங்களில் அவர்களுக்கு நடைமுறை வாழ்க்கையை எடுத்துரைத்து, இந்த வரன் வேண்டாம் என நட்புடன் வலியுறுத்த வேண்டும்.

அதை விடுத்து அவர்களை அடிப்பதோ, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதோ, சொத்தில் பங்கில்லை என கூறுவதோ எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும்.

எனவே, எந்த தசா புக்தி நடக்கிறதோ அதன் போக்கை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு அறிவுரை சொல்வது சிறந்த பலனை அளிக்கும். உதாரணத்திற்கு தற்போது திருமணம் வேண்டாம். சில காலம் பொறுத்திரு, உனக்கே சில விஷயங்கள் புரியும். அதன் பிறகு நிதானமாக முடிவு செய்யலாம் என மகளுக்கு அறிவுறுத்தலாம்.

Share this Story:

Follow Webdunia tamil