Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளின் படிப்பை எப்படி கவனிப்பது?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

குழந்தைகளின் படிப்பை எப்படி கவனிப்பது?
, வெள்ளி, 28 மார்ச் 2008 (11:38 IST)
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

webdunia photoWD
குழந்தையின் பிறந்த ஜாதகத்தில் 2ம் இடம் ஆரம்பக் கல்வி, 4ஆம் இடம் உயர்நிலைக் கல்வி, 9ஆம் இடம் மேல்நிலைக் கல்வி. ஆரம்பக் கல்விக்குரிய கிரகம் நன்றாக இருந்தால் சிறிய வயதிலேயே ரொம்ப நன்றாக படிப்பார்கள். ஆனால் அதே சமயம் உயர்நிலைக் கல்விக்குரிய கிரகம் மந்தமாக இருந்தால் 10ஆம் வகுப்பு வரை மந்தமாகப் படிப்பார்கள். இதுபோலத்தான் கிரக அமைப்பை வைத்து அவர்களது படிப்புத் திறன் மாறுபடும்.

ஒருக் கருவில் இருந்த இரட்டையர்களே மாறுபடும்போது, ஒரு பள்ளியறையில் இருப்பவர்கள் எத்தனை வகையில் இருப்பார்கள்.

ஒவ்வொருவரின் கிரக அமைப்பை கணித்துத்தான் அவர்களது கல்வித்திறனை அறிய முடியும்.

1989ல் நான் ஆசிரியராக இருந்த போது, மாணாக்கர்களின் கிரக அமைப்புகளை ஆராய்ந்தேன். சுக்கிர திசை நடக்கும் குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நாம் ஒன்றை சொல்லிக் கொடுத்தால் அதனுடன் மற்றொன்றையும் சேர்த்து அவர்களாகவே கூறுவார்கள்.

சாதாரண மாணவர்களுக்கு சந்திர, சூரிய தசைகள் நடக்கும். இவர்கள் நாம் கற்பிப்பதை கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவ்வளவுதான்.

ஆனால், சனி திசை, ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடக்கும் பிள்ளைகள் ரொம்ப மந்தமாக இருப்பார்கள். நாம் சொல்லிக் கொடுப்பதை அப்போது புரிந்து கொள்வார்கள். கொஞ்ச நேரம் கழித்து கேட்டால் தெரியாதஎ‌ன்பா‌ர்க‌ள்.

அதனால் பெ‌ற்றோ‌ர்க‌ளு‌ம் நம்ம குழந்தைக்கு எந்த தசை நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடந்தால் சோம்பேறித்தனம், தூக்கம், மறதி போன்றவை ஏற்படும். எனவே அதற்கெல்லாம் குழந்தைகளைப் போட்டு அடித்துக் கொண்டிருக்கக் கூடாது.

ராகு, கேது தசை நடந்தால் பாட்டுக் கேட்டுக் கொண்டே படிப்பது, படம் பார்த்துக் கொண்டே படிப்பது, படுத்துக் கொண்டே படிப்பது போன்றவற்றை செய்வார்கள்.

குரு தசை எல்லாம் நடந்தால் பள்ளியில் இருந்து வந்ததும் முகம், கை கால் கழுவி புத்தகத்தை எடுத்து படிப்பு சம்பந்தமான வேலைகளை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலைகளைப் பார்ப்பார்கள்.

இதனால் பிள்ளைக்கு நடக்கும் கிரக நிலைக்கு ஏற்றவாறு அவர்கள் போக்கில் போய் அவர்களை அதிகத் திறன் வாய்ந்த குழந்தைகளாக மாற்ற முடியும்.

ராகு தசை நடக்கும் குழந்தைகளை, டேய் படிடா என்று சொன்னால் உடனே படிக்க முடியாது என்று எதிர்மறையாக பதில் சொல்வார்கள்.

ராகு தசை நடக்கும் பிள்ளைகளை கூப்பிட்டு கேள்வி கேட்டால் தெரியாது சார் என்று நேரடியாக பதில் சொல்வார்கள்.

எனவே வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும். ராகு தசை நடக்கும் பிள்ளைகளுக்கு தினமும் வீட்டிற்கு வந்ததும் ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிட்டு படிக்கச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் இதைப் படித்தால் இங்கு போகலாம், அங்கு போகலாம் என்று சலுகைகளை அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பரிசு, பாராட்டுகள் மூலமாக ராகு தசை நடக்கும் பிள்ளைகளை நல்ல படிப்பாளிகளாக மாற்ற முடியும்.

ஜோதிட அறிவு இருக்கும் பெற்றோர்கள் அல்லது ஜோதிடர் உதவியுடன் தங்களது பிள்ளைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி வழி நடத்திச் செல்லும்போது கற்றல் இனிமையாகும். இல்லையெனில் கற்றல் கடுமையாகும்.

மருத்துவம் படிப்பதற்கான ஜாதகக்காரரை இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்துவிட்டு...

,, படி படி என்று சொல்வார்கள். இதையெல்லாம் தவிர்க்கலாம்.

பெற்றோரின் வற்புறுத்தலை திணிக்காமல், பிள்ளைகளின் ‌கிரக நட‌ப்பை வைத்து அவர்களது வருங்காலத்தை தீர்மானிப்பது சிறந்தது.

அவனுக்கு உகந்த படிப்பில் சேர்த்துவிட்டால், அதிலேயே அவன் சிறந்து படித்து, மேல் படிப்பைத் தொடர்ந்து, அந்த துறையிலேயே வேலை கிடைத்து பெரும் பணம் சம்பாதிக்க முடியும். மாறுபட்டுவிட்டால் கால விரையம்தான் ஆகு‌ம்.

நேற்று ஒரு குழந்தையின் ஜாதகத்தைக் கொண்டு வந்தார்கள். அந்த குழந்தைக்கு அஷ்டமத்து சனியும், சனி தசையும் நடந்து கொண்டிருக்கிறது. பெரிய தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.

அஷ்டமத்து சனியும், சனி தசையும் நடக்கும் பிள்ளைகளுக்கு விளையாட்டு மூலமாக கற்பிக்க வேண்டும். அந்த நாட்களில் அவன் கண்மூடித்தனமாக இருப்பார்.

விளையாட்டு முறையிலான கற்பித்தல் அவனுக்குத் தேவைப்படும். அதாவது ஆடு என்றால் ஆட்டை அவனுக்குக் காண்பித்துத்தான் கற்றுத்தர வேண்டும். அதேப்போல வீட்டிலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்ன சொல்லிக் கொடுத்தார்கள் என்று கேட்டு அதனை அறிந்து அவனுக்கேற்ற வாறு கற்றுக் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளையை புரிந்து கொள்ளாமல் அப்போது படித்தானே, இப்போது படிக்க மாட்டேன் என்கின்றானே என்று புலம்பாமல் அவனுக்கேற்ப சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவனுக்கேற்ற உணவு, உபச்சாரம் செய்ய வேண்டும்.

இதனைச் செய்தாலே எல்லா பிள்ளைகளும் நன்றாக படிப்பார்கள்.

சிறிய வயதுப் பிள்ளைக‌ள் வயது‌க்கு ‌மீ‌றி பேசு‌ம்போது பெற்றோர்கள் திட்டுவது பற்றி?

அதாவது பெற்றோரின் எதிர் ராசியில் பிள்ளைகள் பிறந்தால் எப்போதும் அப்பாக்கும், பிள்ளைக்கும் சண்டைதான்.

சமீபத்தில் கூட ஒரு அம்மாவும் பிள்ளையும் வந்தார்கள். பையன் அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி. அப்பா பூச நட்சத்திரம் கடக ராசி. அப்பாவின் 6வது ராசியில் மகன், மகனுக்கு 8வது ராசியில் அப்பா. இந்த பூச நட்சத்திர‌த்‌தி‌ல் ‌பிற‌ந்த அ‌ப்பா, தெரு விளக்கில் உட்கார்ந்து படித்தேன், கிழிந்த ஆடை போட்டிருந்தேன் என்றெல்லாம் சொல்வார்கள்.

அவிட்ட‌த்‌தி‌ன் குண‌ம் எப்படின்னா... முடிஞ்சது முடிஞ்சுப் போச்சு, அடுத்தது என்ன என்று போய்க்கொண்டே இருப்பான். இதில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆகி கைகலப்பாகிவி‌ட்டது.

பெற்றோரின் 5ஆம் இடம் புத்திர ஸ்தானம். 5ம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் குழந்தை பிறப்பது தாமதமாகும். கோயில் கோயிலாக போய் விரதமிருந்து குழந்தைப் பேறு பெறுவார்கள். பிறந்த பிறகு அது குறை இது பிரச்சினை என்று புலம்புவார்கள்.

புத்திர ஸ்தானம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு பிள்ளையே இல்லை என்பது ஜாதக முறை. ஏதோ புண்ணியத்தால் பிள்ளைப்பேறு கிடைத்தது. அதை வைத்துக் கொண்டு திருப்தி அடைந்து கொள்ள வேண்டும்.

அந்த குழந்தையிடம் என்ன திறமை இருக்கிறதோ அதை வெளிக்கொணர வேண்டும். அதுதான் பெற்றோரின் வேலை. அதை ‌விடு‌த்து அவனை குறை சொ‌ல்வது தவறு.

எனவே பெ‌ற்றோ‌ர் தா‌ன் ‌பி‌ள்ளைக‌ளி‌ன் ‌கிரக அமை‌ப்புகளை தெ‌ரி‌ந்து கொ‌ண்டு அவ‌ர்களு‌க்கு அ‌ந்த வ‌ழி‌யி‌ல் செ‌ன்று ‌அவனை பெ‌ரிய க‌ல்‌வியாளராக மா‌ற்ற முயல வே‌ண்டு‌ம்.


Share this Story:

Follow Webdunia tamil