பொதுவாக உதயக்காலம் (காலை 6 மணி) அல்லது 9 மணிக்குள், அதிகபட்சம் 10.30க்குள் திருமணம் செய்வது நலம்.
சில மாநிலங்களில் அதாவது ஆந்திராவில் நள்ளிரவு திருமணம் அதிகம். அது அவர்களது நம்பிக்கை. சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நள்ளிரவில் திருமணம் செய்யலாம். சுக்கிர ஆதிகத்தில் பிறந்தவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம் நலம் தரும்.
பொதுவாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம்
ஆனால் காலை 10.30க்கு மேல் மாலை 4 மணிக்குள் செய்யாமல் இருப்பது நல்லது. ஒருவரது ஜாதகத்தைப் பார்த்து ஊனமுற்றப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தினேன். அவரது திருமண ஸ்தானம் அவ்வாறு இருந்தது.
திருமணம் எந்த நேரத்திலும் செய்யலாம் என்பதை அவர்களது ஜாதகத்தைப் பொருத்து நேரத்தைக் கணிக்கலாம். நல்ல லக்னம். நல்ல நட்சத்திரம், நல்ல ஓரை நடக்கும் நாளில் எந்த நேரத்திலும் நடத்தலாம்.