Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌ரா‌சி‌க்கே‌ற்றவாறு நில‌ம் வா‌ங்க வே‌ண்டு‌ம்!

- ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

Advertiesment
‌ரா‌சி‌க்கே‌ற்றவாறு நில‌ம் வா‌ங்க வே‌ண்டு‌ம்!
, வெள்ளி, 18 ஜனவரி 2008 (16:22 IST)
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

ஒ‌வ்வொரு ரா‌சி‌க்கார‌ர்களு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் ‌வீடு அ‌ல்லது ‌நில‌ம் அமையு‌ம். அதாவது செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் செம்ம‌ண் பூமியாய் பார்த்து வாங்க வேண்டும். செம்மண் கலப்பு இருந்தால் கூட போதும்.

ரிஷபம், துலாம் ரா‌சி‌க்கார‌ர்க‌ள் கொஞ்சம் மணல் கட்டு உள்ள பகுதியை வாங்கலாம். மிதுனம், கன்னி - பழுப்பு நிற, பாறைகள் கலந்த மண் பகுதியில் சிறப்படைவர். பாறை ‌நில‌ம் எ‌ன்றா‌ல் பாறைக‌ள் பழமையான உதிர்ந்த நிலையில் காண‌ப்படு‌ம் ‌நில‌ங்களை வாங்கலாம்.

தனுசு, மீனம் ரா‌சி‌யின‌ர் மணலும் மணல் சார்ந்த இடங்களையு‌ம், மகரம், கும்பம் களி மண் கலப்பு சார்ந்த இடங்களையு‌ம் வா‌ங்குவது ‌சிற‌ப்பு.

க‌ட்டிய ‌வீ‌ட்டை வா‌ங்கு‌ம்போது எ‌ப்படி ‌நில அமை‌ப்பை பா‌ர்‌க்க இயலு‌ம். மேலு‌ம், முதல் தளம், இரண்டாம் தளம் என்றெல்லாம் இருக்கும்போது வீட்டின் ‌நில அமை‌ப்பு எ‌வ்வாறு நம‌க்கு‌ப் பொரு‌ந்து‌ம்?

அத‌ற்காக‌த்தா‌‌ன், ‌வீ‌ட்டி‌ன் ‌சு‌ற்று‌ப்புற‌த்தை கண‌க்‌கிடு‌‌கிறோ‌ம். அதாவது, மேஷ ராசி‌க்கா‌ர்க‌ள் வா‌ங்கு‌ம் ‌வீ‌ட்டி‌ன் அருகே ‌மி‌ன்சார‌த் துறை அலுவலக‌ம், தீயணைப்பு அலுவலகம், அரசு அலுவலகம் இரு‌ப்பது நல்லது அ‌ல்ல‌து அ‌வ்வாறு அமையு‌ம்.

ரிஷப ராசி எ‌ன்றாலே அது நந்தி. எனவே ‌ரிஷப ரா‌சி‌க்கார‌ர்க‌ள் பள்ளிக்கூடம், கல்யாண மண்டபம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்க‌ள் அரு‌கி‌ல் அமைய‌ப்பெ‌று‌ம் ‌வீ‌ட்டை வாங்கினால் சிறப்பாக அமையும்.

சிம்ம ராசிக்கு அரசு அலுவலகங்களுக்கு பக்கத்தில், எம்.எல்.ஏ. வீட்டு பக்கத்தில், அமைச்சர் வீட்டு பக்கத்தில், பெரிய பதவி வகிப்பவர்களின் வீட்டின் அருகில் வீடு அமையும். ஏதாவது ஒரு அரசு அலுவலகம் அருகில் இருக்கும். அதாவது ரேஷன் கடைக்கு பக்கத்திலாவது வீடு அமையலாம்.

கன்னி ராசிக்கு கல்வி நிறுவனங்களுக்கு பக்கத்தில், டீச்சர் டிரெயினிங் நிறுவனம் போன்ற பயிற்சி நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் வீடு அமையும். துலாம் ராசிக்காரர்களுக்கு ஏதாவது ஒரு கடை பக்கத்தில் வீடு அமையும். அதாவது வர்த்தக நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பர்.

webdunia photoWD
விருச்சிக ராசிக்கு போலிஸ் ஸ்டேஷன், தீயணைப்பு நிலையம் போன்றவை இருக்கும் இடத்தில் வீடு அமையும். இன்னும் சொல்லப்போனால் டிடக்டிவ் ஏஜென்சிக்கு பக்கத்தில், காவல்துறை அதிகாரி வீட்டின் பக்கத்திலாவது இவர்கள் குடியிருப்பார்கள். விருச்சிக ராசி பூமிக்காரகன் வீடு என்பதால் ஜமீன்தார் வீட்டு பக்கத்து வீட்டில் இவர்கள் குடி‌யிரு‌க்கு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ண்டு.

தனுசு ராசிக்காரர்களின் வீட்டின் ஒரு பக்கத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியும், மறு பக்கத்தில் ரெளடியும் இருப்பார்கள். ஒரு பக்கம் பெரிய நல்ல தலைவரும், மறு பக்கம் கெட்டவர்களும் இருப்பர். டாஸ்மார்க் கடைக்கு பக்கத்தில் கூட தனுசு ராசிக்கு வீடு கிடைக்கும். மேலும், ராணுவத் தளபதி அல்லது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் வீட்டிற்கு அருகிலும் இவர்கள் குடியிருப்பார்கள்.

மகரத்திற்கும், கும்பத்திற்கு டாஸ்மார்க் கடைக்குப் பக்கத்தில் வீடு அமையும், அதிலும் கும்பத்திற்கு டாஸ்மார்க் கடைக்கு பக்கத்தில் ‌வீடு அமையும் வாய்ப்பு அதிகம்.

மேலும், இந்த ராசிக்காரர்கள் எந்த மதமோ அந்த மதத்திற்கு எதிரான மதத்தினர் அதிகமாக குழுமியிருக்கும் இடத்தில் தான் இவர்களுக்கு வீடு அமையும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இரும்புக் கடை பக்கத்தில், தானியங்கள் அடுக்கி வைக்கும் இடம், கிடங்கு அருகில் வீடு அமையும். எப்போதும் லாரி வந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டும் இறக்கிக் கொண்டும், எப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் இடமாக அது இருக்கும்.

கும்பத்திற்கு வாசனைகள் நிறைந்த பகுதியில் வீடு அமையும். அதாவது மீன் மார்க்கெட், பூக்கடைக்கு அருகிலும் கிடைக்கும்.

மீன ராசிக்காரர்களின் பக்கத்து வீட்டில் ஆன்மீக ஞானிகளோ அல்லது வேதர்கள், பூசாரிகளோ இருப்பார்கள். மேலும், ஏதாவது ஒரு வழிபாட்டுத்தலத்துக்கு அருகே அவர்கள் வீடு அமையும்.

ஆனால் இது அவரவர் தசாபுத்திகளின் அடிப்படையில் வித்தியாசப்படும்.

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நீச்சம் அடையும்போது, அவர்களுக்குரிய கிரகம் பலவீனமான கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அவர்களுக்குரிய இடத்தில் வீடு அமையாமல் எதிர்மறையான சூழ்நிலையில் வீடு அமையும்.

எனவே இது பொதுவான அமைப்புதான். அவர்களின் கிரக தசாபுத்திகளுக்கு ஏற்ப மாறுபடும்.

சுக்கிர தசை நடப்பவர்கள் நிழல் சாலையில் ரம்மியமான வீட்டில் வசிப்பார்கள். ராகு திசை நடப்பவர்கள் அதே நிழல் சாலையில் கரடுமுரடான இடத்தில் வசிப்பார்கள். தசாபுத்திக்கு ஏற்றவாரும் நிலை இருக்கும். கிரகங்கள் தங்களுடைய கதிர்வீச்சுகளை அவர்கள் மீது திணிக்கும். அ‌ந்த ‌கிரக‌த்‌தி‌ற்கு‌ரிய இட‌த்‌தி‌ற்கு ந‌‌ம்மை இழு‌த்து‌ச் செ‌ல்லு‌ம்.

உதாரணமாக ஒருவருக்கு சனி தசை நடந்தது. அதுவும் சுபச் சனியல்ல, சிக்கலான சனி. சனி தசை என்பது சுடுகாட்டிற்கும் உகந்தது. அவருக்கு பெரிய பங்களா இருந்தது. சனி தசை நடக்கும் போது பங்களாவில் இருக்க வேண்டாம். மரணமே ஏற்படும் நிலை உள்ளது. நாற்றம் உள்ள வீடு அல்லது பிரச்சினை உள்ள வீடுகளில் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினோம்.

அதை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வீட்டிலேயே இருந்தார். திடீரென அந்த வீட்டிலேயே டிரைனேஜ் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. டிரைனேஜ் பிரச்சினை என்றாலே வீட்டிற்குள் நாற்றம் அடிக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது சாவு நிகழ்ச்சிக்கு போய்விடுவார். அதுபோல் இருந்தது. தொடர்ந்து பல பிரச்சினைகளை அனுபவித்த பின்னர் என்னிடம் வந்தார்.

ஏதாவது சுடுகாடு இருக்கிற மாதிரி வீட்டை‌ப் பார்த்து போய்விடுங்கள் என்று சொன்னேன். அதன்படியே செயல்பட்டார். அங்கு போனதும் நோய் விலகியது. 18 வருடமாக இருந்த வழக்கு சாதகமானது. எல்லாமே நல்லபடியாக நடந்தது.

அதாவது சனி எளிமைக்குரிய கிரகம். கீழ் நிலையில் இருந்துகொண்டு ஒரு உயர்நிலையைத் தரக்கூடிய கிரகம்.

பிணம் எடுப்பவர்கள், அடக்கம் செய்பவர்களை யாரும் கீழ்மையாக சொல்ல மாட்டார்கள். எனவே சனி தசையில் நம்மை அப்பகுதியில் சென்று குடியேறி அவர்களைச் சென்று பார்த்து அதை உணர வைக்கவே சனி தசையில் அதுபோன்ற இடங்களில் குடிபெயர வைக்கிறது.

சனி திசைதான் ஞானத்தை அளிக்கும். சனியை நீதிமான் என்றும் சொல்லலாம். ஆகாயத்தில் இருப்பவனை பூமிக்கு கொண்டு வரும். வாழ்க்கை என்பது என்ன என்பதை உணர வைக்கும். சனி தசை என்பது சனீஸ்வரன் ஆயுள் காரகன். சனியும் எமனுடைய பார்வை கொண்டவர். எனவே சனி திசை வாழ்க்கையை உணர்த்தும் காலகட்டமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil