Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?

Advertiesment
அறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?
, சனி, 22 டிசம்பர் 2007 (16:06 IST)
ஜோ‌திட ர‌த்னா க.ப. ‌வி‌த்யாதர‌ன் ப‌தி‌ல் :

அவசரத்திற்கு கால, நேரம் கிடையாது. அது விதி விலக்கு.

அந்த காலத்தில் மருந்தை உட்கொள்ளத் துவங்குவது அமாவாசை அன்றுதான். அப்பொழுது ஆத்மகாரகன் சூரியனுடன், உடல்-மனோகாரகன் சந்திரன் ஒரு புள்ளியில் மையம் கொள்ளும், இணையும் நாள். நமது உடலும் இரு பாகமாகத்தான் இருக்கிறது. உலகே ஆண், பெண் என்றும், நாசியிலும் சூரிய நாடி, சந்திர நாடி என்று எல்லாமே இரண்டுதான். எனவே இந்த இரண்டும் இணையக் கூடிய நாள் அமாவாசை என்பதால் அந்த நாளில் சிகிச்சையை துவக்கினால் நோய் முற்றிலும் குணமடையும்.

பொதுவாக சிகிச்சைக்கு உகந்தது என்பதற்கு "காக்கையர் நாடி" என்ற நூல் என்ன கூறுகிறது என்றால், பெளர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை நாட்களில் சிகிச்சை மேற்கொண்டால் நோய் வளராமல் தேய்ந்துவிடும் என்கிறது.

அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்க, அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப திதி, நட்சத்திரத்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக லக்னாதிபதி, ராசிநாதன் இவர்கள் இருவரின் அஸ்தட்சம், வக்கிரம், பகைக்கோள் சேர்க்கை, பாவக் கோள் பார்வை இல்லாமல் இருக்கும் நாளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

சந்திராஷ்டமம் குறிக்கிடாமல் இருப்பது மிக முக்கியம். ஜென்ம தாரை, விபத்துத் தாரை, பகைத் தாரை, வதைத் தாரை நட்சத்திரங்களை தவிர்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil