சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி தொடர்பான பரிகாரம்!
, திங்கள், 10 டிசம்பர் 2007 (20:16 IST)
இந்த சனிப்பெயர்ச்சியினாலும், குருப்பெயர்ச்சியினாலும் கடுமையான சோதனைக்குள்ளாகும் இரண்டு ராசி தாரர்கள் எப்படிப்பட்ட பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டதற்கு ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் அளித்த விளக்கம்.இந்த குரு பெயர்ச்சி கடகத்திற்கு கடினமான நேரம்.சனி பெயர்ச்சி சிம்மத்திற்கு கடினமாக இருக்கிறதுகடகத்துக்காரர்கள் மன உளைச்சல், பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை, தூக்கமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுவர்.இவர்கள் தங்கள் ராசி பலத்தை அதிகரித்துக் கொள்ள குரு தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.தாயாருக்கு உதவுவது, தாயை இழந்தவரின் பிள்ளைகளுக்கு உதவுவது ஆகியப் பரிகாரம் செய்தல் நலம். இதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.சிம்ம ராசிக்காரர்களுக்குவீண் விரையம், சந்தேகப்படுதல், முன்கோபம், நம்பி ஏமாந்து போதல், திருடு, வீண் பழி சுமத்தப்படுதல் ஆகியவற்றால் பாதிக்கப்படுவர். ராசியிலேயே சனி சென்று (ஜென்ம சனி) கொண்டிருப்பதால் இவைகள் ஏற்படும்.இதற்கு பரிகாரம் பார்வையற்றவர்களுக்கு உதவுதல், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், தந்தையை இழந்து வாடும் பிள்ளைகள், முதல் தாரத்து குழந்தைகளை இரண்டாம் தாரத்து பெண் கொடுமைப் படுத்துவாள். அந்த குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுதல் ஆகியவை நல்லது.பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக இந்த இடர்பாடுகளில் இருந்து விடுபட முடியும்.