Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை யாஷிகா சென்ற கார் விபத்து: குடிபோதையில் சென்றாரா?

Webdunia
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (10:04 IST)
நடிகை யாஷிகா சென்ற கார் சென்னை நுங்கம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்த யாஷிகா, அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது அவர் ஐந்து படங்களில் நடித்து பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
 
இந்த நிலையில் நேற்றிரவு யாஷிகா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரில் இருந்தவர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த கார் நுங்கம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது ஒரு கடையில் மோதி நின்றுள்ளது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்து நடந்த சில நிமிடங்களில் யாஷிகா மட்டும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிகிறது
 
இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வரும் போலீசார் காரை ஓட்டியது யாஷிகாவா? என்பது குறித்தும் அவரும் மது அருந்தியிருந்தாரா? என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்தை ஓட்டிய படி ரீல்ஸ்.. சென்னையில் டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்..!

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில்! யாரெல்லாம் பங்கேற்கலாம்?

இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா? ராணுவ விமானத்தில் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்? பரபரப்பு தகவல்!

பெங்களூரில் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1.61 லட்சம் அபராதம் - பரபரப்பு தகவல்

அடுத்த கட்டுரையில்