திகட்டாத அழகு! மங்களகரமான போட்டோசூட்... அடேங்கப்பா யாஷிகாவா இது...

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (13:11 IST)
நடிகை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 
 
நடிகை யாஷிகா தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்த போதும் கடந்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்றதம் மூலம் இவருக்கு ரசிகர்கல் மத்தியில் நல்லதொரு அடையாளம் கிடைத்தது. 
 
அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் தற்போது யாஷிகா யோகி பாபு உடன் ஜாம்பி படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜாம்பி படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால், தற்போது புடவை கட்டி, நகை அணிந்து மங்களமாக போட்டோசூட் எடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்...

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சமந்தாவா இது...! வெளியான வீடியோவால் ஷாக்கானா ரசிகர்கள் - நீங்களே பாருங்க!