Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு.....

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (13:20 IST)
பிரபல தமிழ் எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பாலகுமாரன்(71) உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் மரணமடைந்தார்.

 
சிறுகதை, நாவல் எழுத்தாளர், சினிமா இயக்குனர், வசனகர்த்தா என பல முகங்களை கொண்டவர் பாலகுமாரன். இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் 150க்கும் மேற்பட்ட நாவல்கள், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
 
நாயகன் முதல் புதுப்பேட்டை வரை 23 திரைப்படங்களுக்கு இவர் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதிய இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருதும் வழங்கப்பட்டது. அதுபோக, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். பாட்சா படத்தில் ரஜினிகாந்த் பேசிய ‘ நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன  மாதிரி’ என்கிற வசனம் இவர் எழுதியதுதான்.
 
கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இரு முறை இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. எனவே, சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். இவரின் மறைவிற்கு பல எழுத்தாளர்களும், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

ரகுபதி சட்டத்துறை அமைச்சரா; தி.மு.க., பேட்டை ரவுடியா? அண்ணாமலை

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments