Publish Date: Tue, 15 May 2018 (08:55 IST)
Updated Date: Tue, 15 May 2018 (08:57 IST)
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளிக்காமல் சென்றுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு முடிவு ஏற்படும் என காத்திருந்த நிலையில் மத்திய அரசு செயல் வரைவு திட்டத்தை தாக்கல் செய்தவுடன் இந்த வழக்கு வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வரைவு திட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்காத செல்லூர் ராஜூ ஏற்கனவே என்னை ரஜினி விஷயத்தில் மாட்டி விட்டீர்கள். உங்கள் கேள்விக்கு பதிலளிக்க போவதில்லை என கூறியபடி சென்றுவிட்டார். பேச வேண்டிய விஷயத்திற்கு பேசாமல், ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு மெனக்கெட்டு பேசுவதே ஆளும் கட்சியினரின் செயல் என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.